இனம் மதம் மொழி கடந்து ஒன்றிணைந்து வன்முறைக் கலாசாரத்தை ஒழிப்போம்

கிறிஸ்தவ மக்களின் புனித வழிபாட்டுக்குரிய நாளான ஈஸ்டர் நாளில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் மனித நேயம் கொண்ட அனைவரினது இதயத்தையும் சுக்குநூறாக்கியுள்ளது. மனஅமைதி வேண்டி வாழ்வில் செழுமை வேண்டி இறைபிரார்த்தனையில் ஈடுபட்ட வேளை நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களினால் உறவுகளைத் தொலைத்து அல்லறும் அப்பாவிகளின் இடத்தில் எம்மை வைத்து உணரும் போது இதயத்தின் வேதனை இன்னும் இரட்டிப்பாகின்றது. ஏனோ தெரியவில்லை இலங்கை தேசத்தில் ஏப்பிரல் மே மாதங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற திருவள்ளுவர் விழா- 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த 09.03.2019 சனிக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. யாழ். சிவகணேசன் புடைவைகயத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்விற்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமை தாங்கினார். நிகழ்வில் கடவுள் வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.பரந்தாமன் இசைத்தார். வரவேற்புரையை தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வராவும் முதன்மையுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் ஆற்றினர். சிறப்பு நிகழ்வாக தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கியச்சுடர் … மேலும் வாசிக்க

திருக்குறள் தேர்வு 2019 இன் முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் உயர்தர மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை (02.03.2019) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் 26 உயர்தரப் பாடசாலைகளில் இருந்து  800 பேர் விண்ணப்பித்து 620 பேர்  தோற்றிய இத்தேர்வின் பிரகாரம் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ளவர்களுகக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் எதிர்வரும் சனிக்கிழமை (09.03.2019) தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளது.  பரிசில் பெறவுள்ளவர்களின் விபரம் வருமாறு – முதலாம் இடம் … மேலும் வாசிக்க

தமிழ்த் துறைப் பேராசிரியரான கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனுக்கு தமிழ்ச்சங்கத்தின் வாழ்த்துக்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பேராசிரியராகப் பதிவியுயர்வு பெற்றுள்ள கலாநிதி ஸ்ரீ பிரசாந்தனுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று பின்னர் ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகக் கடமையாற்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றவர். அகில இலங்கை கம்பன் கழகத்தின் அமைப்பாளராகச் செயற்படும் இவர் தமிழ் உலகம் … மேலும் வாசிக்க

சிரேஸ்ட பேராசிரியர்கள் வேல்நம்பி விசாகரூபன் மற்றும் இரகுநாதனுக்கு வாழ்த்துக்கள்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பி யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றார்.   05.03.2019 தனக்கு வழங்கப்பட்ட ( 2017 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படும்படியான) சிரேஷ்ட பேராசிரியர் என்ற தகைமையை அவர் ஏற்றுக்கொண்டார். புத்தூர் மண்ணில் பிறந்து ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் கல்வி பயின்று வணிக முகாமைத்துவத் துறையிலும் தமிழ்த்துறையிலும் உயரிய ஆளுமை பெற்று விளங்கும் எங்கள் சிரேஸ்ட … மேலும் வாசிக்க

சிறப்பாக நடைபெற்ற திருக்குறள் தேர்வு -2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் உயர்தர கலைப்பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே நடத்திய திருக்குறள் போட்டி 02.03.2019 சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந் நிகழ்வின் பதிவுகள்.. மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விழா-2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ்.சிவகணேசன் புடைவையகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.  சிறப்பு நிகழ்வாக பட்டிமண்டபம் இடம்பெறவுள்ளது. இதில் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் (தமிழ்நாடு) நடுவராகக் கலந்து கொள்கிறார். யாழ். மற்றும் தமிழகப் பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். வடமாகாண ஆளுநர் முனைவர் சுரேன் இராகவன் முதன்மையுரை ஆற்றவுள்ளார். இவ்வாண்டும் திருவள்ளுவர் விழாவையொட்டி உயர்தரப் பள்ளி மாணவரிடையே திருக்குறள் தேர்வு நடைபெறவுள்ளது. … மேலும் வாசிக்க

சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்களின் மறைவு சைவத்தமிழ் உலகிற்குப் பேரிழப்பு – யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அஞ்சலிச் செய்தி

ஈழத்துத் தமிழ் உலகில் ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் கட்டுரையாளராகவும் திகழ்ந்து அரிய பல தொண்டுகளை ஆற்றிய சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்களின் மறைவு சைவத் தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகும் அமரரின் இழப்புக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் தன்  அஞ்சலிகளை பகிர்ந்து கொள்கின்றது.    “குப்பிளானில் பிறந்த சிவசுப்பிரமணியம் மகாலிங்கம் கணிதத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியராக மிளிர்ந்து சைவசமயத்தின் மீது கொண்ட பற்றினால் இந்து நாகரிகத்துறை ஆசிரியராகிப் பின்னர் அத்துறை சார்ந்த விரிவுரையாளராகவும் தன்னை … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் வடமாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக முன்னெடுத்த கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து இந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்திற்கமைவாகத் தமிழ்ப்பாடத்திற்கான பரீட்சையை எதிர்கொள்ளும் வடபுல மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை முன்னெடுத்திருந்தன.  கடந்த வாரம் (11.02.2019 – 15.02.2019) ஐந்து நாட்கள் வவுனியா, வரணி, யாழ்ப்பாணம், மருதனார்மடம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் வடபுலத்தின் 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்;கக்கூடிய வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 2400 மாணவர்கள் இக்கருத்தரங்குகளில் … மேலும் வாசிக்க