தமிழ்ச்சங்கத்தால் கு.றஜீபனின் சீத்துவக்கேடு கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டது.

கு.றஜீபனின் சீத்துவக்கேடு என்ற கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமை தாங்கினார். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ஆற்றினார். நூலின் முதற்பிரதியை விரிவுரையாளர் அருள்நங்கை சண்முகநாதன் பெற்றுக்கொண்டார். கவிஞர் சோ.பத்மநாதன் ஆய்வுரை நிகழ்;த்தினார். கு.றஜீபன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தராகப் … மேலும் வாசிக்க

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் தமிழ்ச்சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இதன் உத்தியோகபூர்வக் கையளிப்பு வைபவம் இன்று 18.10.2016 மாலை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் த.நடனேந்திரன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.லலீசனிடம் தளபாடங்களைக் கையளித்தார்.  நல்லூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மகேஸ்வரகுமார், … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதிவிழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி விழா கடந்த 04.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. . திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச்சங்க இல்லப் பிள்ளைகள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தமையைத் தொடர்ந்து மானிப்பாய் கலைக்கோவில் நாட்டியப் பள்ளி மாணவிகள் அதன் இயக்குநர் செல்வாம்பிகை வீரசிங்கத்தின் நெறியாள்கையில் வரவேற்பு ஆடலை வழங்கினர். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் த.அருள்குமரன் … மேலும் வாசிக்க

யாழ். தமிழ்ச்சங்கத்தின் புத்தகத்திருவிழா ஆரம்பமாகியது

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கோவில் வீதியில் உள்ள கம்பன் கோட்ட மண்டபத்தில் நடத்தப்படுகின்ற நல்லூர் புத்தகத் திருவிழா கடந்த 17.08.2016 காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்ச்சங்க உபதலைவரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமாகிய கலாநிதி ஆறு. திருமுருகன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சங்கத்தின் உப செயலாளர்களுள் ஒருவராகிய கோ. ரஜனிகாந் நன்றியுரை ஆற்றினார். ஈழத்து புத்தகங்களை … மேலும் வாசிக்க

தங்கத்தாத்தா விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத் தமிழ் மன்றமும் இணைந்து முன்னெடுத்த தங்கத்தாத்தா நினைவு விழா 19.07.2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முத்துத்தம்பி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமாகிய அ.பௌநந்தி கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ்வரன் வரவேற’;புரையாற்றினார். . இன்றைய சமூகத்தை … மேலும் வாசிக்க

அமரர் சி. சிவஞானம் அவர்களின் பிரிவு குறித்துத் தமிழ்ச்சங்கத்தின் அஞ்சலி

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறிதரனின் அன்புத் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 24.05.2016 அன்று இறைபதம் அடைந்தார். எதிர்வரும் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் யாவருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம். மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் விசேட நிர்வாகசபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் விசேட நிர்வாக சபைக்கூட்டம் 14.05.2016 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இல. 90 ஞானவைரவர் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்திற்கென அலுவலகத்தைத் தாபித்தல், பாடசாலை மாணவர்களின் தமிழறிவை மேம்படுத்தல், ஈழத்திற்குப் புகழ் சேர்ந்த தமிழ்ப்புலமையாளர்களை மையப்படுத்தி ஆய்வரங்குகளை நடத்துதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முதன்மை வழங்குவது பற்றி ஆராயப்பட்டது. இதேவேளை புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக்கூட்டம் கடந்த 08.05.2016 ஞர்யிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலனசபை மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. இதன்போது செயலாளர் இரா. செல்வவடிவேல் 2012 – 2016 ஆண்டு காலப்பகுதிக்கான செயலாளர் அறிக்கையை வாசித்தார். இதன் பிரதி சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைவிடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தங்களுடன் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து பொருளாளர் ச.லலீசன் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில் (08.05.2016 அன்று)  யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே தெரிவுகள் இடம்பெற்றன. இதன்படி   பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர் : பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் துணைத் தலைவர்கள் : (1) பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) (2) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், … மேலும் வாசிக்க

ஈழத்து நாவலாசிரியர் கே. டானியல் நினைவு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தமிழியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 18.03.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஈழத்து நாவலாசிரியர் கே. டானியல் நினைவு விழா இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அழைப்பிதழை இணைப்பில் காண்க. (இத்தொடரின் முதல் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சி.வை.தாமோதரம்பிள்ளை விழாவாகவும் இரண்டாவது நிகழ்வு யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் வீரமாமுனிவர் விழாவாகவும் … மேலும் வாசிக்க