தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றுவர். யாழ். கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் … மேலும் வாசிக்க

கலாநிதி தர்சனனின் நாவலர் இசையரங்கம்

தமிழ்ச் சங்கம் நடாத்திய நாவலர் விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்சனன் மிகச் சிறப்பாக நாவலர் இசையரங்கை நிகழ்த்தியிருந்தார். நாவலரைப் பற்றிய பாடல்களை மெட்டமைத்து அவர் பாடிய விதம் எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.பண்டிதர் க.பொ.இரத்தினம் செந்தமிழ் சொல்லருவி லலீசன் ஆகியோர் யாத்த பாடல்களுக்கு பொருத்தமான மெட்டினை அமைத்து தர்சனன் அவர்கள் இசைத்திருந்தார். அவருக்கு அணிசெய் கலைஞர்களாக மிருதங்கம் விரிவுரையாளர் விமல்சங்கர் வயலின் விரிவுரையாளர் கோபிதாஸ் கெஞ்சிரா … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா  24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவி விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் நாவலர் விழா 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் நல்குவர். நாவலரும் தமிழ்த்தேசியமும் என்ற … மேலும் வாசிக்க

நெடுந்தீவில் சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் விழா

நெடுந்தீவில் சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா நிகழ்வுகள். உலகத்திசையாவும் தமிழைக் காவிச்சென்று உலக அரங்குகளில் தமிழ் மொழியின் செழுமையை பழைமையை நிலைநிறுத்தி தமிழுக்கு இன்று செம்மொழி அந்தஸ்து கிடைக்க அன்றே உழைத்த தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இவ் வருடம் உலகில் தமிழர்கள் வாழும் பாகங்களில் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுப்பரப்பில் ஆழ மூழ்கிய ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியது எனினும் அத்தகைய … மேலும் வாசிக்க

புத்தகம் அன்பளித்தோர்

தமிழ்ச்சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி வடபுல மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்களுக்காக தம்மால் எழுதப்பட்ட,தொகுக்கப்பட்ட மற்றும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை பலரும் அன்பளிப்புச் செய்திருந்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் வெளிப்படைத் தன்மை கருதி அன்பளிப்புச் செய்தோர் விபரங்களையும் வெளியிடுகின்றோம். 1.பேராசிரியர் மா.சின்னத்தம்பி இலங்கைப் பொருளாதாரம் – 05 ஆசிரியர் வழிகாட்டி 05 கல்வியலாளன் 01 மொத்தம்11 … மேலும் வாசிக்க

பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச்சங்கத்தால் புத்தகங்கள் அன்பளிப்பு

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் அதிகளவான வெற்றிஇடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொண்ட பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தகப்பொதியொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ் புத்தகங்களை தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையின் பேரில் எழுத்தாளர்கள் பலர் அன்பளிப்புச் செய்திருந்தனர். வழங்கப்பட்ட பாடசாலைகள் • யாழ்ப்பாணம்- அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி • கிளிநொச்சி- தர்மபுரம் மகாவித்தியாலயம் • வவுனியா- ஓமந்தை மத்திய கல்லூரி • … மேலும் வாசிக்க

சிறப்புற நடைபெற்ற ஆய்வரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆய்வரங்க நிகழ்வுகள் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. சம்பிரதாயபூர்வமாக மேலும் வாசிக்க

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாப் போட்டி பரிசளிப்பு பதிவுகள்

தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சு கவிதை கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் நடைபெற்றது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை செல்வி.வசந்தி அரசரட்ணம் தலமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பதக்கங்களும் புத்தகப் பரிசுகளும் சான்றிதழ்களும் மேலும் வாசிக்க