யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ அடிகளாருக்கு இனிய மணிவிழா வாழ்த்துக்கள் (25.01.2018)

image-0-02-06-f767a2a499a44c2b57aaa80320ba11a72c8deaabf164067896dd22f5326aa0f9-Vபுனித பத்திரிசியார் கல்லூரியின் புகழ் மிக்க அதிபராகப் பணியாற்றி 24.01.2017 புதன்கிழமை அகவை அறுபது எய்தி பணி நிறைவு கண்டுள்ள அதிபர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளாருக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அடிகளார் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவராகவும் விளங்குகின்றார்.

25.01.1958 இல் கரம்பொனில் பிறந்த அவர் 25.01.2018 வியாழக்கிழமை அறுபதாவது பிறந்தநாளைக் காண்கிறார்.
168 வருட பாரம்பரியம் கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரியின் 26 ஆவது அதிபராகக் கடந்த 10 வருட காலம் அன்னார் பணியாற்றியுள்ளார். 1985 இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அடிகளார் யாழ். பேராலயம், வட்டக்கச்சி, கரவெட்டி ஆகிய இடங்களில் ஆன்மீகக் குருவாகப் பணியாற்றி 1989 ஆம் ஆண்டு புனித பத்திரிசிரியார் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.

அதி வண. யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வேளையில் அருட்பணி ஜெறோ அப்பணிக்கு நியமிக்கப்பட்டார். புனித பத்திரிசியார் கல்லூரியை யாழ் மண்ணில் ஒழுக்கம் மிக்க முன்னணிப் பாடசாலையாக வளர்த்தெடுத்த பெருமை அவரைச் சாரும்.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவின் முக்கிய செயற்பாட்டாளராக அடிகளார் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருட்பணி ஜெறோ அடிகளாரின் பணிக்களம் இன்னும் விரிந்து செல்லும் . அவரது ஆளுமையால் எங்கள்; மண்ணும் மனுக்குலமும் நன்மை பெற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply