முகிலெனக்கு துகிலாகும் கவிதைநூல் வெளியீடு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர் வடிவழகையனின் முகிலெனக்குத் துகிலாகும் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 14.07.2018 நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கப் பொருளாளரும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆசியுரைகளை தமிழ்ச்சங்க உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், மூத்த கவிஞர் சோ.பத்மமநாதன் ஆகியோர் ஆற்றினர். வெளியீட்டுரையை வரணியூர் வே.சிவராசாவும் மதிப்பீட்டுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் விரிவுரையாளர் ச.லலீசனும் ஆற்றினர். நூலை தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை கிருபா லேணர்ஸ் நிறுவன உரிமையாளர் அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு நிகழ்வாக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் “ஞாலச் சுழலுக்குள் நாங்கள் அகப்பட்டோமா? காலச் சுழிக்குள்ளே காலைவிட்டுக் கொண்டோமா? என்ற பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் போதையினால் தவறுகின்ற பாதை என கவிஞர் இ.பிரகலாதனும் திண்டாட்டம் ஆகிவரும் கொண்டாட்டம் என கவிஞர் ஜீவா சஜீவனும் புனிதங்கள் இழந்துவிட்ட மனிதங்கள் என்ற பொருளில் கவிஞர் ச.முகுந்தனும் கவிதை படித்தனர்.

நிகழ்வில் கவிஞர்கள் ஆர்வலர்கள் அரசியலாளர்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர் .

Bookmark the permalink.

Leave a Reply