தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு யாழ். பிரதான வீதி (தண்ணீர் தாங்கி அருகில்) கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது. 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் ‘தமிழ் அடையாள உருவாக்கம் – திருவள்ளுவரை முன்னிறுத்தி’ என்ற பொருளில் வழங்குவார். 
.
தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திறந்த விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் புதுவை இரத்தினதுரை அணியை எதிர்த்து சுவாமி விபுலாநந்தர் அணி களமிறங்க உள்ளது.
.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ் மறைமாவட்டமும் இணைந்து 2013 ஆம் ஆண்டில் தனிநாயகம் அடிகள் பிறப்பு நூற்றாண்டு விழாவை முன்னெடுத்தமையும் அதனையொட்டி பிரதான வீதியில் தண்ணீர்த்தாங்கி அருகில் தனிநாயகம் அடிகளாருக்கு உருவச் சிலை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கன

நிகழ்வுக்கான அனுசரணையை அவுஸ்திரேலியா வாழ் சட்டவாளர் திரு.மகாலிங்கம் சுதர்சன் வழங்கவுள்ளார். 

 
 
Attachments area
 
 
 
 
 
Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*