யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்  அஞ்சலி

 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பொன்னையா செங்கதிர்ச்செல்வன் அவர்கள் காலமானமையையிட்டு எமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
 
06.10.1964 இல் கருகம்பனையில் பிறந்த பொன்னையா செங்கதிர்ச்செல்வன் 06.11.2018 இல் காலமானார். அவரது இறுதி நிகழ்வு 08.11.2018 காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
 
வண்ணை நாவலர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சிறப்புப் பட்டத்தையும் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். தமிழ் இலக்கணத்தில் ஆளுமை பெற்று இலக்கணம் சார்ந்த ஆராய்ச்சிகளையும் கற்பித்தல் பணிகளையும் மேற்கொண்டிருந்தார். 
 
தமிழியல் துறைசார்ந்த அறிஞர் பொ.செங்கதிர்ச்செல்வனின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், மாணவர்கள், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினர் அனைவருக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 
Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*