யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா 01.12.2018 சனிக்கிழமை 

 
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் பதிப்பகமும் இணைந்து  நடத்தும் நாவலர் விழா எதிர்வரும் சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெறும் 
 
இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றுவர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைப்பர். 
 
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பா.பாலகணேசன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தொடக்வுரையையும் ஆற்றுவர். 
 
நாவலர் விழாவையொட்டி சனிக்கிழமை பிற்பகல் யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்படவுள்ள நாவலர் விடயத்திறன் இறுதிப் போட்டிக்கான பரிசளிப்பும் அன்றைய தினம் நடைபெறும் போட்டியின் இணைப்பாளர் ஜீ.சஜீவன் பரிசளிப்பை நெறிப்படுத்துவார். 
 
சிறப்பு நிகழ்ச்சிகளாக  யாழ். சக்சபோன் சகோதரர்களான ஆர்.வை. நவரூபன், ஆர்.வை. காண்டீபன் ஆகியோரின் நாதசங்கமம் என்ற தலைப்பில் அமைந்த சக்சபோன் கச்சேரி, சின்னமணியின் சீடர் கலாவித்தகர் ஆசிரியர் ஏ.எஸ். மதியழகனின் தலைமையில் கலைவாணர் வில்லிசைக் குழுவினர் வழங்கும் ‘ஆறுமுக’ நாவலர் என்ற பொருளில் அமைந்த வில்லிசை என்பன இடம்பெறவுள்ளன. 
 
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் த.கருணாகரன் நன்றியுரை ஆற்றுவார். யாழ். இந்துக் கல்லூரி மாணவன் சி.விசாகனன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவார். 
Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*