யாழ். நல்லூர் சிலப்பதிகார விழாவின் முதல்நாள் மாலை அமர்வு

யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு திருவையாறு தமிழ்ஐயா கல்விக் கழகமும் இணைந்து முன்னெடுக்கும் சிலப்பதிகார விழாவின் மாலை அமர்வு (19.01.2019) பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் ஜெ.மதுசிகன் இசைத்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலசண்முகன் வரவேற்புரையையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் வாழ்த்துரையையும் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தொடக்கவுரையையும் ஆற்றினர்.

சென்னை சுருதிலயா வித்தியாலய முதல்வர் முனைவர் பார்வதி பாலச்சுப்பிரமணியம், மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் க.சரஸ்வதி ஆகியோர் பங்கேற்ற இசையரங்கம் இசையரங்கம், யாழ். கலாகேந்திரா நடனப்பள்ளி இயக்குநர் முனைவர் கிருஷாந்தி இரவீந்திராவின் நெறியாள்கையில் சிலப்பதிகாரக் கதையைக் காட்சிப்படுத்திய நாட்டிய அரங்கம் என்பன இடம்பெற்றன. தமிழ்ச்சங்கத்தின் பத்திராதிபர் லோ. துஷிகரன் நன்றியுரை ஆற்றினார். ஆட்சிக் குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறி நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*