தமிழ்ச்சங்கம் நடாத்தும் நாவலர் விழா

கரிகணண் நிறுவன ஆதரவில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.12.2014) நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச் சங்கதலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் மங்கல விளக்கினை திரு.திருமதி.சி.ராஐ்குமார் தம்பதிகள் ஏற்றவுள்ளனர். தமிழ்த் தெய்வவணக்கத்தை திருமதி.ஹேமலதா கண்ணதாசனும் வரவேற்புரையை தமிழ்ச் சங்க பொருளாளர் திரு.ச.லலீசனும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் உரும்பராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.தி.செல்வமனோகரன் நாவலரின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளதுடன் வலம்புரி ஆசிரியர் திரு.ந.விஐயசுந்தரம் தலமையில் நாவலர் ஆற்றிய பணிகளுள் காலத்தால் விஞ்சி நிற்பது சமயப்பணிகளே தமிழ்ப்பணிகளே எனும் தலைப்பில் பட்டிமன்ற நிகழ்வும் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக நடனத்துறையினர் வழங்கும் ஆறுமுகநாவலர் எனும் நாட்டிய நிகழ்வும் இடம்பெறவுள்ளது. தமிழ்ச் சங்கம் முன்னர் நடாத்திய கவிதைப் பட்டறைக்கு பின் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பரிசுபெற்றவர்களுக்கான பரிசும் இந் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. நிகழ்வின் நன்றியுரையை தமிழ்ச் சங்க செயலாளர் சொல்லின்செல்வர் இரா.செல்வடிவேல் நிகழ்த்தவுள்ளார். இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்ச் சங்கத்தினர் அன்பு அழைப்பு விடுக்கின்றனர். back copy front copy

Bookmark the permalink.

Leave a Reply