உலகத் தாய்மொழி நாள் விழா-2020

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழாவும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவரங்கமும் இன்று 20 02 2020 சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் ந. சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் உலகத் தாய்மொழி நாள் குறித்த சிறப்புரையை தமிழ்ச் சங்கத்தின்  பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸும் உயர்தர மாணவருக்கான திருக்குறள் பாடப்பகுதி குறித்த கண்ணோட்ட உரையை தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை குறித்த சிறப்புரையை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ச.லலீசனும் நிகழ்த்தினர்.

பாரதி விழா புகைப்படத் தொகுப்பு….

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதிவிழா ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது

தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

நிகழ்வில் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தமிழ்க்கவிதையில் பாரதியின் புரட்சி என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.

வரவேற்புரையை ந.ஐங்கரனும் நன்றியுரையை தமிழ்ச் சங்கத்தின் உப செயலர் முதுநிலை விரிவுரையாளர் ந.செல்வாம்பிகையும் ஆற்றினர்.

கவிஞர் கலாநிதி ச. முகுந்தன் தலைமையில் “முண்டாசு கவிஞனிடம் முகிழ்த்த கவியடியால் எம்நிலையைச் சொல்லிடுவோம்” என்ற கருப்பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் கவிஞர்களான கு.ரஜீபன், காரை வ. வடிவழகையன், குரும்பையூர் த.ஐங்கரன், அளவையூர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் பாரதியின் அடிகளை வைத்துக் கவிதை படைத்தனர்.

நடன ஆசிரியர் கீதாஞ்சலி சுதர்சனின் ஸ்வஸ்திக் நாட்டியப் பள்ளி மாணவர்கள் வழங்கிய பாரதிபாடல்களாலான நாட்டிய அரங்கம் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவாக பாடசாலை மாணவரிடையே தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட விவாதப் போட்டிக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது. இதன் போது வெற்றிக் கேடயங்களை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வழங்கி கௌரவித்தார்.

22 அணிகள் பங்கு கொண்ட விவாதச் சமரில் முதலிடத்தை யாழ். இந்து கல்லூரியும் இரண்டாம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மூன்றாம் இடத்தை யாழ். மத்திய கல்லூரி மற்றும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி என்பனவும் கனவான் தன்மை கொண்ட அணிக்கான விருதை – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

சிறப்புற்ற பாரதி விழா

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதிவிழா ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது

தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

நிகழ்வில் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தமிழ்க்கவிதையில் பாரதியின் புரட்சி என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.

வரவேற்புரையை ந.ஐங்கரனும் நன்றியுரையை தமிழ்ச் சங்கத்தின் உப செயலர் முதுநிலை விரிவுரையாளர் ந.செல்வாம்பிகையும் ஆற்றினர்.

கவிஞர் கலாநிதி ச. முகுந்தன் தலைமையில் “முண்டாசு கவிஞனிடம் முகிழ்த்த கவியடியால் எம்நிலையைச் சொல்லிடுவோம்” என்ற கருப்பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் கவிஞர்களான கு.ரஜீபன், காரை வ. வடிவழகையன், குரும்பையூர் த.ஐங்கரன், அளவையூர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் பாரதியின் அடிகளை வைத்துக் கவிதை படைத்தனர்.

நடன ஆசிரியர் கீதாஞ்சலி சுதர்சனின் ஸ்வஸ்திக் நாட்டியப் பள்ளி மாணவர்கள் வழங்கிய பாரதிபாடல்களாலான நாட்டிய அரங்கம் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவாக பாடசாலை மாணவரிடையே தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட விவாதப் போட்டிக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது. இதன் போது வெற்றிக் கேடயங்களை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வழங்கி கௌரவித்தார்.

22 அணிகள் பங்கு கொண்ட விவாதச் சமரில் முதலிடத்தை யாழ். இந்து கல்லூரியும் இரண்டாம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மூன்றாம் இடத்தை யாழ். மத்திய கல்லூரி மற்றும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி என்பனவும் கனவான் தன்மை கொண்ட அணிக்கான விருதை – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும் பெற்றுக்கொண்டன. நிகழ்வின் காணொளித் தொகுப்பு…

கலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்த விவாதச் சமர் புகைப்படத்தொகுப்பு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அமரர் கலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்தமாக 08.02.2020 சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்திய விவாதச்சமரின் முழுமைப் புகைப்படத்தொகுப்பு

தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் இன்று (08.02.2020) சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் பிரபல விவாத அணிகளைக் கொண்ட பாடசாலைகளுடன் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, கொழும்பு பிரதேசப் பாடசாலைகளும் இணைந்து 22 அணிகள் போட்டியில் பங்கேற்றன.

தம்பர் மண்டபத்தில் இரவு இடம்பெற்ற இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை எதிர்கொண்டது. ஏழு நடுவர்களுள் ஐந்துக்கு இரண்டு என்ற கணக்கில் யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

போட்டியின் இரண்டாம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மூன்றாம் இடத்தை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்பனவும் பெற்றுக்கொண்டன.

போட்டித் தொடரில் கனவான் தன்மையுடன் (Gentlemen ship) நடத்தைகளை வெளிக்காட்டிய அணிக்கான விருதும் வழங்கப்பட்டது. இதனை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டது.

மிகச்சிறந்த விவாதிக்கான விருதை யாழ். மத்திய கல்லூரி விவாத அணித்தலைவர் கு.மோகிதன் பெற்றுக்கொண்டார்.

மாணவ நடுவர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில் பதினாறு பேர் பங்கேற்றிருந்தனர். போட்டிகள் முடிவடைந்த பின்னர் நடுவர்கள் முன்னால் வெற்றி பெறும் அணி எது என்பதைத் தமது நியாயப்படுத்தல்களுடன் இவர்கள் வெளிப்படுத்தினர் இதன் அடிப்படையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ச. அபினாத் முதற்பரிசைப் பெற்றார்.

நாற்பதுக்கும் மேற்பட்டோர் நடுவர்களாகச் செயற்பட்ட இந்நிகழ்வில் நடுவர்களாகப் பங்கேற்றோருக்கு நினைவுச் சின்னங்கள்வழங்கப்பட்டன.

போட்டியின் இணைப்பாளராக தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறியும்; உதவி இணைப்பாளராக சி.விசாகனனும் செயற்பட்டு – சிறப்பாகப் போட்டிகளை ஒழுங்குபடுத்தியமைக்காகப் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ். மத்திய கல்லூரி அதிபர் தம்பர் மண்டபத்தை வழங்கியதோடல்லாமல்; போட்டி நடைபெறுவதற்காகப் பதினொரு களங்களையும் ஏற்படுத்தி வழங்கியிருந்தார்.

(படங்கள் நிகழ்வின் இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்டவை)

தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தனியாகம் அடிகளின் உருவச்சிலைக்கு அருட்பணி ஜெறோ அடிகளாரும் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசனும் மலர் மாலை அணிவித்தனர். சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி. கேசவன் நினைவுப் பேருரையாற்றினார். தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதப் போட்டிக்கான இறுதிப் போட்டியும் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் , தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி, செயலாளர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, அகில இலங்கை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.கா. வைத்தீஸ்வரக் குருக்கள், தமிழகப் பேச்சாளர் டாக்டர் வே.சங்கரநாராயணன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைக்கழக, ஆசிரிய கலாசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புற்ற சிவபூமிக் கலைநிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்ட சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் ஆசியுரையை வழங்கியதுடன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ந.கணேசமூர்த்தி வழங்கினார். நிகழ்வில் அரும்பொருளகம் – நமது பாரம்பரியத்தை பேண்தகு களம் எனும் தலைப்பில் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர்.அ.சண்முகதாஸ் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலமையில் தொன்மை மறவோம் எனும் தலைப்பிலான கவியரங்கம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கவிஞர்களான திரு.த.ஜெயசீலன் திரு.ச.முகுந்தன்,திரு.நாக.சிவசிதம்பரம் மற்றும் திருமதி தர்மினி ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தொடர்ந்து தமிழ்ச் சங்க தலைவர் செந்தமிழ்சொல்லருவி ச.லலீசன் தலமையில் தலைமுறை கடந்தும் தம் வாழ்வியலை தக்க வைக்கும் பண்பியல் தமிழர்களிடையே பெருகி வருகின்றதா? அருகி வருகின்றதா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பேச்சாளர்களான திரு.வை.விஜயபாஸ்கர், திரு.கு.பாலசண்முகன், திரு.இ.சர்வேஸ்வரா, திரு.ந.ஐங்கரன், திரு.தெ.ஹர்சன், திரு.ஜீவா.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் நன்றியுரையை தமிழ்ச் சங்க பத்திராதிபர் திரு.லோ.துசிகரன் நிகழ்த்தினார். நிகழ்வில் நல்லை ஆதீன குருமுதல்வர் உள்ளிட்ட பல பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர். 

நிகழ்வின் பதிவுகளை கீழே காணலாம்.

 

சிவபூமி அருட்காட்சியகத்தில் தமிழ்ச் சங்க நிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படவுள்ள சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நிகழ்வுகள் குறித்த விபரங்களை கீழே உள்ள அழைப்பிதழில் காணலாம். 

கலாநிதி க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாகார்த்த பாடசாலை மட்ட விவாதச் சுற்றுப்போட்டி– 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாகநடத்தப்படும்.

 1. பாடசாலைமாணவர்களுக்கானது
 2. திறந்தபோட்டி– 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது

பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிமுறைகள்

 1. ஒருஅணியில் ஐவர் இடம் பெறவேண்டும்
 2. போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்புபட்டியலில் இருப்பர்.
 3. தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் முன்னரே வழங்கப்படும். ஆனால் போட்டித் தினத்தன்று வழங்கப்பட்ட தலைப்புக்களில் ஒன்று நடுவர்களால் முடிவுசெய்யப்பட்டு வழங்கப்படும்.
 4. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கான தலைப்புக்கள் உடன் வழங்கப்பட்டுத் தயார்ப்படுத்தலுக்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

விவாதிகளுக்கான நேர அளவு

01           தலைவர் – தொடக்கவுரை   5 நிமிடம்

02           இணைவிவாதி   4 நிமிடம்

03           நிறைவுவிவாதி  4 நிமிடம்

01           தலைவர் – தொகுப்புரை     3 நிமிடம்

போட்டிக்கான விண்ணப்பங்கள் உரியவகையில் நிறைவுசெய்யப்பட்டு அதிபரின் உறுதிப்படுத்தலுடன் 30.10.2019க்கு முன்னதாக அஞ்சல் மூலமாக

தலைவர்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

இல 28 குமாரசாமிவீதி

கந்தர்மடம்

யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

 • விண்ணப்பங்களைத் தமிழ்ச் சங்க இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
 • தெரிவுப்போட்டிகளுக்கு முன்னதாக விவாதிகளை திசைமுகப்படுத்துவதற்காக பயிற்சிப்பட்டறையொன்று நடாத்தப்படும். இப் பட்டறையில் விவாதிகள் கலந்துகொள்ளவேண்டியது அவசிய நிபந்தனையல்ல.
 • தெரிவுப் போட்டிகளின் முதல் சுற்றுபோட்டிகள் சுழற்சிமுறை அடிப்படையிலும் ஏனைய போட்டிகள் விலகல் முறையிலும் நடைபெறும்.
 • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
 • போட்டியாளர்கள் பண்பாட்டு உடையுடன் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.

பரிசு விபரம்

 • போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிமாணவர்களுக்கு பெறுமதியான புத்தகப் பரிசுகளும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் பாடசாலை நூலகத்துக்கு ஒருதொகுதி புத்தகங்களும் வழங்கப்படும்.
 • இறுதிப் போட்டி வெற்றியாளர்களுக்கு பாடசாலைக்கு பொதுவான வகையில் நினைவுக் கேடயம் வழங்கப்படும்.
 • இறுதிப்போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களிடையே சிறந்த விவாதி என ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவருக்குத் தமிழ்ச் சங்கத்தின் இலச்சனை பொறிக்கப்பட்ட விருது வழங்கப்படும்.
 • போட்டியிலும் பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

தெரிவுப் போட்டிக்கானதலைப்புக்கள்

 1. இன்றைய கல்விமுறை தாய்மொழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது – இல்லை
 2. அறிவியல் வளர்ச்சி தமிழ்மொழியின் நிலைத்திருப்புக்குச் சாதகமானது–பாதகமானது
 3. தமிழ்ப் பண்பாட்டின் மீதான தமிழர்களின் பற்றுறுதி வளர்கின்றது–தளர்கின்றது
 4. தமிழ் இலக்கியங்கள் பெண்களை மேன்மைப்படுத்தியுள்ளன–சிறுமைப்படுத்தியுள்ளன
 5. காலத்துக்கேற்பதமிழ் மொழிதன்னைதகவமைத்துக்கொள்கின்றது – இல்லை
 6. பாரதிபாடல்களில் விஞ்சிநிற்பதுமொழிப் பற்றே – தேசப் பற்றே
 7. தம்பியருள் தனித்துவமானவன் இலக்குவனே–கும்பகர்ணணே
 8. வள்ளுவம் சொல்லும் வாழ்வியலை இன்றையதமிழ்ச் சமூகம் பின்பற்றுகின்றது – இல்லை
 9. ஈழத்துதமிழ் இலக்கியபுலமைத்துவம் வளர்கின்றது–தளர்கின்றது
 10. மெல்லத்தமிழ் இனிவாழும் – வீழும்

போட்டிபற்றியமேலதிகதொடர்புகளுக்கு

 1. திரு.ச.லலீசன் தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்               0773787358
 2. திரு.இ.சர்வேஸ்வரா   பொதுச்செயலாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 0778449739
 3. பேராசிரியர் தி.வேல்நம்பிபொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்     0777448352
 4. செல்வி.ப.கதிர்தர்சினி-   போட்டி இணைப்பாளர் –