நல்லூரில் டான் தொலைக்காட்சி – தமிழ்ச்சங்கம் இணைந்து சைவம் தழைத்தோங்குக செயற்பாடு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சியின் ஓம் தொலைக்காட்சி அலைவரிசையும் இணைந்து முன்னெடுக்கும் சைவத்தழைத்தோங்குக செயற்பாட்டின் தொடக்க நாள் நிகழ்வுகள் 06.08.2019 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு ஆரம்பமாகின. 
.
இந் நிகழ்வு தொடர்ந்து ஓம் தொலைக்காட்சியின் ஊடாக நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டவண்ணமுள்ளது. 
.
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பருத்தித்துறை வீதி கோவில் வீதி சந்திக்குச் சமீபமாக (லிங்கம் கிறீம் ஹவுஸ் அருகாக) டான் தொலைக்காட்சியின் கலையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு 7 மணி தொடக்கம் 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டவண்ணமுள்ளன.

 

பாடசாலை மாணவர்களுக்காக 30 நிமிடங்களைக் கொண்ட போட்டி நடத்தப்படும். இதில் ஒரு சொல்லில் விடையளிக்கும் 25 வினாக்கள் வினவப்படும். வழங்கப்படும் விடைத்தாளில் விடையளிக்க வேண்டும். தினமும் 8 மணிக்கு பரிசளிப்பு நடைபெறும். பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பரிசாக பூபாலசிங்கம் நிறுவனத்தின் பரிசுச் சீட்டு வழங்கப்படுவதுடன் நிறைவு நாளில் தொடர்ச்சியாக பங்குபெற்றிய பிள்ளைகளுக்கு தமிழ்ச் சங்க இலச்சினை பொறிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும்.

அதேவேளை தொடர்ச்சியாக திருவிழா நாள்கள் முழுவதும் நடைபெறும் போட்டியில் ஓட்டுமொத்தமாக அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படும்.

தொடக்க  நிகழ்வின் சில பதிவுகளைக் காணலாம்.

 

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*