நல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள்விழா (19.01.2019) காலை அமர்வு

சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்நாடு திருவையாறு தமிழ்ஐயா கல்விக் கழகத் தலைவர் அவ்வை அடிப்பொடி முனைவர் மு.கலைவேந்தன் தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர். இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் சிலப்பதிகார வாழ்த்து இசைத்தார். 

தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் ஆசியுரையையும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் வாழ்த்துரையையும் தமிழ்ச்சங்க உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் சிறப்புரையையும் ஆற்றினர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் புலத் தலைவர் முனைவர் ஆறு. இராமநாதன் மற்றும் துணைப் பேராசிரியர் கோவை மணி ஆகியோர் கருத்துரைகளை ஆற்றினர்.

காலை அமர்வின் நிறைவு நிகழ்வாக யாழ். மாநகர ஆணையாளர் கவிஞர் த.ஜெயசீலன் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் சென்னை சண்.அருட்பிரகாசம், குடந்தை திருஞானசம்பந்தர், சென்னை பாளை பாலாஜி, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ச.முகுந்தன் ஆகியோர் கவிதை பாடினர். 

ஆட்சிக் குழு உறுப்பினர் த.கருணாகரன் நன்றியுரையாற்றினார். யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி ப.கதிர்தர்சினி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

Bookmark the permalink.

Leave a Reply