தேவைகள்

  • காணிநிலம் வேண்டும்….

எண்ணற்ற பணிகளை தமிழுக்காய் ஆற்றும் மனஎண்ணங்களை மாசற்று காவும் எங்கள் சங்கம் இன்னும் ஓரிடத்தில் நிலையாய் இடம் கொள்ள காலம் கைகூடவில்லை. எமக்காய் ஓரிடத்தை தேடும் எமது தேடல் பல வழிகளில் தொடர்ந்த வண்ணமுள்ளது. பொருத்தமான இடத்தில் தமிழ்ச்சங்கத்தை அமர்த்த காணி தேடுகின்றோம். கிடைத்த காணிகளை கொள்வனவு செய்ய நிதி தேட்டம் பெரும் தடையாய் உள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மித்து நல்லூரை நெருங்கி நல்லதொரு இடம் கிடைத்தால் நன்று என்பது பலரது கருத்து. இருந்தும் எவராவது ஒருவர் தன் வீட்டைக் காணியை தன் தந்தை தாய் நினைவாய் தமிழுக்காய் ஈந்தால் அத்தகைய பெருமனதை கௌரவித்து அவ்விடத்திலும் அரங்கமைக்க தமிழ்ச்சங்கம் தயாராகவுள்ளது.

  • பௌதிகவளப் பற்றாக்குறை

புதிதாய் முளைக்கும் இவ் விதை விருட்சமாகி நிமிர்ந்து முழுமையாய் நிழல் பரப்ப இன்னும் சில காலங்கள் தவிர்க்கமுடியாமல் தேவையாகலாம். அக் காலங்களின் அளவை சுருக்கி விரைவாக்க சங்கத்தின் வளப்பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும். தளபாடங்கள் கணினிகள் நூலகம் என விரியும் தேவைகளைத் தீர்க்க உங்கள் கரங்களை எம்மோடு இணைப்பீர்கள் என நம்புவோம்.

Comments are closed.