அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்

எமது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளில் அக்கறையும் கரினையும் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளரும் இலக்கியவாதியுமான கவிஞர்.த.ஜெயசீலன் அவர்களின் தாயார் அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் காலமான செய்தியறிந்து கவலையுறுகின்றோம். அம்மையார் அவர்கள். சிறந்த தாயொருவர் தன் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பல பண்புகளை தன் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுத்தவர் என்பது அவரது பிள்ளைகளுடன் பழகும் தோறும் நாம் உணர்வதுண்டு. குறிப்பாக இறை நம்பிக்கை, மொழிப் பற்று, இலக்கிய ரசனை, இசைரசனை, கவின்கலைகள் மீதான நாட்டம், சமூகப் பற்று, சக மனிதர்களுடான சிநேகபூர்வ உறவு, மூத்தோரை கனம் பண்ணுதல், தன்நிலை தாழாமை, எனப் பல பண்புகளை அவர் தன் பிள்ளைகளுக்கு வாழ்வியல் நெறிகளுக்கூடாக போதித்தவர். தனது பிள்ளைகளை வெறுமனே பரீட்சை மையப்பட்ட சிந்தனைகளுக்குள் சிக்க வைக்காது இலக்கிய நுகர்வுக்கான வாய்ப்புக்களையும் வழங்கி வளர்த்தெடுத்தவர்
அவரது மகன் கவிஞர்.த.ஜெயசீலன் எமது தமிழ்ச் சங்க செயற்பாடுகளில் இரட்டைத் தளங்களில் கரிசனையை செலுத்தி வருபவர். குறிப்பாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எனும் வகையில் மாநகர சபை ஆணையாளராக தமிழ்ச் சங்கப்பணிகளுக்கு ஊக்கம் தருவதுடன் ஒரு கவிஞராக எங்கள் நிகழ்வுகளில் பங்கேற்றது மட்டுமன்றி எமது சங்கத்தால் நடத்தப்பெற்ற கவிதைப் பட்டறை பயிற்சியில் எந்தவிதமான பிரதியுபகாரமும் பெறாது வளவாளராக கலந்து கொண்டவர். அவரது தாயின் வளர்ப்பின் மகத்துவத்தினால் தமிழியியல் பணிகளில் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டவர் ஜெயசீலன்.
அன்னையின் துயரால் கவலையுறும் கவிஞர் த.ஜெயசீலன் அவர்களுக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரி மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆறுதல்களைப் பகிர்ந்து கொள்வதுடன் அம்மையாரின் ஆத்மா எல்லாம் வல்ல எங்கள் வல்லமை நாயகன் நல்லைக் கந்தனின் தாழ்களில் அமைதியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ச.லலீசன்
தலைவர் – யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்
இ.சர்வேஸ்வரா
பொதுச்செயலாளர் – யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

Bookmark the permalink.

Leave a Reply