தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய சங்கப்பேழை நூல்வெளியீடு, உலகத் தாய்மொழிநாள் பேருரை மற்றும் 2019 உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் அதிவிசேட சித்தி பெற்ற வடமாகாண மாணவர்கள் 154 பேருக்கான மதிப்பளிப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள்  கடந்த 19.03.2022 சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.  தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா கலந்து கொண்டார்.  நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் தமிழ்மொழிநாள் பேருரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரமும் அவருக்கான அறிமுகவுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் சங்கப்பேழை நூல் வெளியீட்டுரையை நூலின் பதிப்பாசிரியர் லோ. துசிகரனும் நூலாய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் ஆற்றினர். நன்றியுரையை சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கு. பாலசண்முகனும் நிகழ்ச்சி முன்னிலைப்படுத்தலை சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் மேற்கொண்டனர். சங்கப்பேழை நூலை தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க அதன் முதற்பிரதியை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பெற்றுக்கொண்டார்.  நிகழ்வில் மாகாண மற்றும் வலயங்களின் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் தமிழாசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.  கௌரவம் பெற்ற மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பணப்பரிசில், ஐந்து பெறுமதியான புத்தகங்கள் அடங்கிய பொதி மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டன.  மேலும் வாசிக்க

அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்

எமது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளில் அக்கறையும் கரினையும் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளரும் இலக்கியவாதியுமான கவிஞர்.த.ஜெயசீலன் அவர்களின் தாயார் அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் காலமான செய்தியறிந்து கவலையுறுகின்றோம். அம்மையார் அவர்கள். சிறந்த தாயொருவர் தன் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பல பண்புகளை தன் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுத்தவர் என்பது அவரது பிள்ளைகளுடன் பழகும் தோறும் நாம் உணர்வதுண்டு. குறிப்பாக இறை நம்பிக்கை, மொழிப் பற்று, இலக்கிய ரசனை, இசைரசனை, கவின்கலைகள் … மேலும் வாசிக்க

காரை கவிஞர் வடிவழகையனின் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வடிவழகையனின் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது.    தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒரு துண்டு வானம் நிறைய நிலா , குறும்பா கொஞ்சம் குறும்பா ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன   நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்ச் சங்கத்தின் … மேலும் வாசிக்க

பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாளான 11.12.2021 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் அரசடியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் வணக்கம் செலுத்தப்பட்டது. கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகக் கைக்கொண்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்தியத் துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ், யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், யாழ். மாநகர ஆணையாளர் கவிஞர் த. ஜெயசீலன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன், ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலசண்முகன் உள்ளிட்டோர் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் நாவலர் நினைவரங்கம் -2021

சைவத்துக்கும், தமிழுக்கும் அளப்பரிய பணிகளாற்றியவரும், ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படுபவருமான சைவத்தின் காவலர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை நன்னாளான நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) முற்பகல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ‘நாவலர் நினைவரங்கம்’ அவர் வாழ்ந்த புனித மண்ணான யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.நாவலர் கலாசார மண்டபத்தின் முன்பாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்ற வழிபாட்டில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உப தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், … மேலும் வாசிக்க

சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை

சைவப்புலவர் சு.செல்லத்துரை ஐயா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தியறிந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த துயரம் அடைகின்றது. எமது சைவத் தமிழின் செழுமைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட ஆற்றலாளர் அமரர் அவர்கள். பாரம்பரியக் கல்வி முறைகளுக்குள்ளால் தமிழையும் சைவத்தையும் கற்றுத் தேர்ந்த சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் தான் கற்றுவந்த பாதைகளின் ஊடாகவே தமிழைப் பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்தவர். ஈழமண்ணில் தமிழ் நிலைத்திருப்பதற்கு சைவத்தின் வியாபகம் அவசியமானது எனும் பெரும் உண்மையை … மேலும் வாசிக்க

தமிழ்க் கடவுள் ஆலயத்தின் தலைமகனுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி

நல்லூர் கந்தன் ஆலயத்தின் தலமை நிர்வாகி குமாரதாஸ மாப்பாண முதலியார் இயற்கை எய்திய செய்தி உலகம் வாழ் தமிழ் மக்களுக்கு கவலை தரும் செய்தி. அவரது வாழ்வும் அவ் வாழ்வில் அவர் கடைப்பிடித்த நெறிமுறையும் யாழ்ப்பாண தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது தனித்தன்மை மிக்க அடையாளமாகத் திகழும். தமிழர்கள் தங்கள் தாய்ப்பூமியின் தலைநகராக யாழ்ப்பாணத்தையும் அதன் இதயமாக நல்லூரையும் கொண்டாடவிளையும் மற்றும் ஆவணப்படுத்தும் எண்ணங்களுக்கு சொல்லிலும் செயல் பெரிது என … மேலும் வாசிக்க

இணையவழியில் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா இன்று (17.07.2021) இரவு 8 மணிக்கு சூம் செயலி வழியாக நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் துணவியூர் சி. கேசவன், ஆடிப்பிறப்பின் மகத்துவம் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றுவார். தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கு. பாலசண்முகன் வரவேற்புரையையும் செயலாளர் இ.சர்வேஸ்வரா நிறைவுரையையும் வழங்கவுள்ளனர். நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான … மேலும் வாசிக்க

உலகத்திசைகளுக்கு தமிழர் பாரம்பரிய கலைவடிவங்களைக் காவிச்சென்றவர் கலைத்தூது கலாநிதி மரியசேவியர் அடிகளார்

கலைத்தூது மரியசேவியர் அடிகளார் மறைந்து விட்டார் எனும் செய்தி மிகப் பெரும் கவலையாக ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பரவிநிற்கின்றது. திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார். தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலைஅமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவ் அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் … மேலும் வாசிக்க

தமிழர் இசைவடிவத்தின் காவலரான கணபதிப்பிள்ளை ஐயா காலத்தால் மறக்கமுடியாத கலைப் பொக்கிசம்

ஈழத்தமிழர்களின் இசைப்பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க விற்பன்னராகத் திகழ்ந்த சங்கீதபூசணம் கணபதிப்பிள்ளை ஐயா காலமான செய்தி கவலைதரும் விடயமாகவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழர்களின் கலைப்பாரம்பரியத்தில் குறிப்பாக இசைப்பாரம்பரியத்தில் கணபதிப்பிள்ளை ஐயாவுக்கு காத்திரமான இடமுண்டு. இசைத்துறைக்காக அத்துறை சார்ந்த கலைஞராகவும் கல்வி நிர்வாகியாகவும் அவர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. இன்று எமது மண்ணில் இசைத்துறையைப் போதிக்கும் இசையாசிரியர்கள் பலர் அவருக்கு ஏதொவொரு வகையில் நன்றிக்கடன் பட்டவர்களாகவேயிருப்பார்கள். வட இலங்கை சங்கீத சபையின் பணிகளில் வினைத்திறனுடன் பணியாற்றிய … மேலும் வாசிக்க