திருக்குறள் வினாடி வினாப் போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் – சிவகணேசன் புடைவையகம் இணைந்து நடத்தும் வள்ளுவர் விழாவை முன்னிட்ட உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான

திருக்குறள் வினாடி வினாப் போட்டி– 2019

(எழுத்துத் தேர்வு வகையானது)

போட்டி விதி முறைகள்

• இப் போட்டியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் பங்குபற்ற முடியும். (பாடசாலை ஊடான மீள் பரீட்சார்த்திகள் உட்பட)

• பாடசாலை பரீட்சார்த்தியாகவோ தனிப்பட்ட பரீட்சார்த்தியாகவோ தோற்ற முடியும்.

• வினாக்கள் யாவும் க.பொ.த உயர்தர தமிழ்ப் பாட விதானத்தில் குறிக்கப்பட்டுள்ள திருக்குறளின் அதிகாரங்களை உள்ளடக்கியதாக அமையும்.

• மொத்தம் 50 வினாக்களை கொண்ட ஒரு மணித்தியால காலப்பகுதிக்குரியதாக வினாத்தாள் அமையும். (இதில் 25 வினாக்கள் பொதுவானவை. ஏனைய 25 வினாக்கள் தற்போது பாடசாலையில் கைக்கொள்ளப்படும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானதாக அமையும்.)

• வினாக்களின் தன்மை ஒரு சொல்லில் அல்லது ஒரு வசனத்தில் விடையளிப்பதாக அமையும்.

• போட்டியில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் ஐந்து போட்டியாளர்களுக்கு விசேட பரிசில்கள் வழங்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைவருக்கும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலான தரச் சித்தி குறிப்பிட்ட சான்றிதழ் வழங்கப்படும். (அதிவிசேட, விசேட, சாதரண)

• அதிகளவான பிள்ளைகளைப் பங்குபற்ற வைக்கும் பாடசாலை நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கப்படுவதுடன் அதிகளவில் சித்திச் சதவீதத்தை காண்பித்த மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தமிழ்ச் சங்க இலச்சினை பொறிக்கப்பட்ட விசேட விருது வழங்கப்படும்.

• பாடசாலை மாணவர்கள் பின்னிணைக்கப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மேலதிகமாகத் தேவைப்படும் போது புகைப்படப்பிரதியெடுக்க முடியும்.

• தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் பெயர் முகவரி மற்றும் கைத்தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு கடிதம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

• பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் யாவும் தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், இல 28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு 22.02.2019 க்கு முன்னதாக அனுப்பிவைக்கப்படவேண்டும்.

போட்டிகள் 02.03.2019 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும். ரிசில்கள் மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படும்.

போட்டி பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு
திரு.ச.லலீசன் தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்                                             0773787358
திரு.இ.சர்வேஸ்வரா பொதுச்செயலாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்         0778449739
பேராசிரியர் தி.வேல்நம்பி பொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்          0777448352
திரு. கு. பாலஷண்முகன், இணைப்பாளர், திருக்குறள் போட்டி                            0776215500

பொதுச் செயலாளர்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

இல 28

குமாரசாமி வீதி

கந்தர்மடம் 
யாழ்ப்பாணம்

விண்ணப்படிவத்தை தரவிறக்க கீழே அழுத்துங்கள்

திருக்குறள் போட்டி விண்ணப்ப படிவம்

Bookmark the permalink.

Leave a Reply