கலாவிநோதன் சின்னமணி ஞாபகார்த்த வில்லுப்பாட்டுப் போட்டி

 
கலாவிநோதன் க.கணபதிப்பிள்ளை (சின்னமணி) நினைவாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வடக்கு மாகாணம் தழுவிய நிலையில் வில்லுப்பாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
 
இப்போட்டியில் தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணியாகவோ அல்லது தாங்கள் அங்கத்துவம் பெறும் அறநெறிப்பாடசாலை அல்லது கலை அமைப்புக்கள் மன்றங்களின் ஊடாகவோ பங்கு பற்ற முடியும்.
.
அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கு அமைவாகவே இப் போட்டிகள் நடைபெறும். 30 நிமிடங்களை கொண்ட இப் போட்டியில் கீழே குறிப்பிடப்படும் ஈழத்தின் துறைசார் ஆளுமை ஒருவரைக் கருப்பொருளாக கொண்டு வில்லுப்பாட்டு வடிவமைக்கப்படவேண்டும்.
 
* கலாவிநோதன் க.கணபதிப்பிள்ளை (சின்னமணி)
* சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
* மகாகவி உருத்திரமூர்த்தி
* செங்கை ஆழியான்
* கவிஞர் நீலாவணண்
* கவிஞர் முருகையன்
* பேராசிரியர் கைலாசபதி
* பேராசிரியர் வித்தியானந்தன்
* வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
* வித்துவசிரோமணி கணேசையர்
* கோ.நடேசையர்
* ஏரம்பு சுப்பையா
* பண்டிதை இ.பத்மாசனி
* நடிகமணி வி.வி வைரமுத்து
* நாடகவியலாளர் ஏ.ரி.பொன்னுத்துரை

* காரை பண்டிதர் க. வைத்தீஸ்வரக் குருக்கள்

* சுவாமி ஞானப்பிரகாசர்
* பூந்தான் யோசேப்பு
* முல்லைமணி
* அண்ணவியார் எஸ்.தம்பிஐயா
* யாழ்ப்பாணம் பதுறுதீன் புலவர்
 
 
பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள் அல்லது கலைஅமைப்புக்கள் தமது விண்ணப்பங்களை தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இல 28 குமாரசாமி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு 01.03.2019 க்கு முன்பதாக அனுப்பி வைக்க வேண்டும்.
.
போட்டிகள் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
.
முதற்பரிசு – இருபத்தையாயிரம் ரூபா
இரண்டாம் பரிசு – பதினைந்தாயிரம் ரூபா
மூன்றாம் பரிசு – பத்தாயிரம் ரூபா
 
 
மேலதிக விபரங்களுக்கு போட்டி இணைப்பாளர் வேல்.நந்தகுமார் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை) தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி இலக்கம் – 0779297479)
 
 
 
 
 
Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*