யாழ்ப்பாணம் கண்ட மஹாகவி பாரதியின் திருநாள்..

barathyயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதி விழா 11.09.2012 நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் காலை மாலை அமர்வுகளாக சிறப்பாக இடம்பெற்றது.

தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பெயரில் அமைந்த அரங்கத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

காலை அமர்வுக்கு திருமறைக் கலாமன்ற நிறுவுநர் கலாநிதி வண. நீ.மரியசேவியர் அடிகள் தலைமை தாங்கினார். நாதஸ்வர இளவரசு பி.எஸ். பாலமுருகன் குழவினர் பாரதி பாடல்களை மங்கல இசையாக முழங்க நிகழ்வுகள் ஆரம்பமாயின. யாழ். சிவகணேசன் புடைவையக உரிமையாளர் க.அருள்நேசன் தம்பதியர்
மங்கலவிளக்கேற்றினர்.

யாழ். இந்துமகளிர் கல்லூரி மாணவியர் “வாழ்க நிரந்தரம்” என்ற தமிழ்மொழி வாழ்த்துப் பாடலையும் “நீராரும் கடலுடுத்த” என்ற தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலையும் இசைத்தனர். தொடர்ந்து வரவேற்புரையை லோ.துஷிகரனும்இ வாழ்த்துரையை சோ.இ.பிரணதார்த்திஹரக் குருக்களும் நல்கினர்.

எங்கள் பார்வையில் பாரதி என்ற பொருளில் மாணவர் அரங்கம் இடம்பெற்றது. இளம் பேச்சாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வாக இது அமைந்தது. தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர்களுள் ஒருவரான சிவ. மகாலிங்கம் இந்நிகழ்வை ஆற்றுப்படுத்தினார்.

கலாநிதி மனோன்மணி சண்முகதாசின் பிரதியாக்கத்தில் இசையமைப்பாளர் முரளியின் பின்னணி இசை ஒலிப்பதிவுடன் தமிழ்ச் சங்க வெளியீடாக உருவான ‘மகாகவி பாரதி’ என்ற இறுவட்டு வெளியீடு இடம்பெற்றது. இதன் வெளியீட்டுரையை தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலர் விரிவுரையாளர் ச.லலீசன் வழங்கினார். சங்கத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் இறுவட்டை வெளியிட தொழிலதிபர் க.அருள்நேசன் அதனைப் பெற்றுக்கொண்டார்.

தென்.கிழக்குப் பல்கலைக்கழக மொழிகள் பண்பாட்டுத்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ‘பாரதியின் பன்முக ஆளுமையும் புனைதிறனும்’ என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பாரதி விழாவையொட்டித் தமிழ்ச்சங்கம் தனது மாணவ அங்கத்தினரிடையே நடத்திய பேச்சுப்போட்டிக்கான பரிசளிப்பும் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நல்கிய நன்றியுரையும் இடம்பெற்றன.

மாலை அமர்வு சங்கத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் யாழ். வர்த்தகப் பிரமுகர்களாகிய எஸ்.சிவகுமார் தம்பதியர்இ சி.ராஜ்குமார் தம்பதியினரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. தமிழ்ச் சங்க துணைச் செயலருள் ஒருவராகிய ஆசிரியர் நாக. தமிழிந்திரன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய மாணவியரின் ஆடலளிக்கை காண்போரைக் கண் இமைக்காது பார்க்க வைத்தது.

மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் கவிஞர்களான த.ஜெயசீலன் கு.றஜீபன்இ த.நாகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கலாநிதி ஆறு. திருமுருகன் “பாரதி கண்ட தெய்வீகம்” என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.

தமிழ்ச்சங்கத்தின் சிறப்புவெளியீடாக அமைந்த “பாரதியின் புலமைத்துவம” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு அடுத்து இடம்பெற்றது.

கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய இந்நூலுக்கான வெளியீட்டுரையை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் வழங்கினார். யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் அறிமுகவுரையாற்றினார்.

நிறைவு நிகழ்வாக யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத்தலைவர் கலாநிதி த.கலாமணியின் அண்ணாவியத்தில் யாழ். நாட்டார் வழக்கியல் கழகத்தினர் வழங்கிய பாஞ்சாலி சபதம் இசைநாடகம் இடம்பெற்றது.

காலை மாலை இரு அமர்வுகளிலும் பெருந்தொகையானவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை நிகழ்வுகளை கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் மாலை நிகழ்வுகளை சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் முன்னிலைப்படுத்தினர்.

நிறைவாகஇ யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளரான இரா.செல்வவடிவேல் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

Bookmark the permalink.

Comments are closed.