சிலப்பதிகாரத்தின் பதினொரு வகை ஆடல்களையும் காட்சிப் படுத்திய சிலப்பதிகார விழா

யாழ். நல்லூரில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவின் நிறைவு நாள் நிறைவு நிகழ்வாக சிலம்பு கூறும் பதினோர் ஆடல்கள் என்ற தலைப்பில் அமைந்த நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. அனைவரும் வியக்கும் வகையில் ஏறத்தாழ ஒரு மணி நேர ஆற்றுகை நிகழ்வாக இது அமைந்திருந்தது. . கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக நடனத்துறையினர் இந்த அழகிய ஆற்றுகையை வழங்கியிருந்தனர். பதினொரு விரிவுரையாளர்களும் 22 நடனத்துறை மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்வைப் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் திருவாசக முற்றோதல்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் 12.01.2019 சனி காலை முதல் மதியம் வரை திருவாசக முற்றோதல் சிறப்புற இடம்பெற்றது. தமிழ்ச் சங்கத்துக்கு நிரந்தர காணி மற்றும் கட்டடம் அமைய வேண்டும் எனும் பிரார்த்தனையை முன்வைத்து இவ் திருவாசக முற்றோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அமரிக்க ஹாவாய் ஆச்சிரமத்தைச் சேர்ந்த தொண்டுநாத சுவாமிகள் ஆசியுரை வழங்கியதுடன் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமான கலாநிதி செஞ்சொற்செல்வர் … மேலும் வாசிக்க

சிலப்பதிகார முத்தமிழ் விழா 18 மற்றும் 19ம் திகதிகளில் நல்லூரில்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் திருவையாறு ஐயா தமிழ் கல்விக் கழகம் மற்றும் தமிழ் ஆடற்கலை மன்றம் இணைந்து நடாத்தும் சிலப்பதிகார முத்தமிழ் விழா எதிர்வரும் 18 மற்றும் 19 ம் திகதிகளில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. காலை மற்றும் மாலை அமர்வுகளாக நடைபெறும் இவ் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றள்ளதுடன் கவியரங்கம் பட்டிமன்றம் ஆய்வரங்கம் என பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ் அமுதம் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற நாவலர் விழா -2018

[ngg_images source=”galleries” container_ids=”10″ sortorder=”396,420,409,408,390,394,387,389,415,388,391,392,393,395,397,398,399,400,401,402,403,405,406,407,410,411,412,413,414,417,418,419,421,422,416,404″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”0″ slideshow_link_text=”[Show as slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] மேலும் வாசிக்க

யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா 01.12.2018 சனிக்கிழமை 

  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் பதிப்பகமும் இணைந்து  நடத்தும் நாவலர் விழா எதிர்வரும் சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெறும்    இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றுவர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைப்பர்.    தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு … மேலும் வாசிக்க

யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்  அஞ்சலி

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பொன்னையா செங்கதிர்ச்செல்வன் அவர்கள் காலமானமையையிட்டு எமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.   06.10.1964 இல் கருகம்பனையில் பிறந்த பொன்னையா செங்கதிர்ச்செல்வன் 06.11.2018 இல் காலமானார். அவரது இறுதி நிகழ்வு 08.11.2018 காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.   வண்ணை நாவலர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய … மேலும் வாசிக்க

கண்ணீர் அஞ்சலி – அமரர் திரு.சின்னப்பு தவராசா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.த.கருணாகரனின் தந்தையார் அமரர் சின்னப்பு தவராசா 31.102.2018 புதன்கிழமை காலமாகிவிட்டார். அமரரின் பிரிவால் துயருறும் எமது நண்பர் திரு.த.கருணாகரனினதும் அவரது குடும்பத்தினரும் பிரிவுத் துயரில் நாமும் நனைவதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பிலான  அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  மேலும் வாசிக்க

தன் எழுத்தை ஆயுதமாக்கிப் பயணித்தவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

நமது ஈழமண்ணில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி மறைந்தாலும் தம் எழுத்தால் சமூக நன்மைகளை விளைவித்தவர்கள் மிகச் சிலரே. அத்தகைய மகோன்னதமான மனிதர்களுள் மறைந்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முக்கியமானவர். தமிழ் இனம் விடுதலைக்கான குரலை உயர்த்திய போது ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பட்டு விடுதலைப்பயணத்தில் இணைந்து கொண்டார்கள். அதில் அமரர் இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் எழுத்திலக்கியத் துறையில் ஒரு கதைசொல்லியாக மட்டுமன்றி கருத்துருவாக்கம் செய்யும் இலக்கிய … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க பொருளாளர் பேராசிரியர் வேல்நம்பிக்கு கனடாவில் பொன்விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்து வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பிக்கு கனடாவில் அவரது மாணவர்களால் பொன்விழா நடாத்தப்பெற்றுள்ளது. பதிவுகளை படங்களில் காணலாம்.  மேலும் வாசிக்க