யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா 01.12.2018 சனிக்கிழமை 

  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் பதிப்பகமும் இணைந்து  நடத்தும் நாவலர் விழா எதிர்வரும் சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெறும்    இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றுவர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைப்பர்.    தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு … மேலும் வாசிக்க

யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்  அஞ்சலி

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பொன்னையா செங்கதிர்ச்செல்வன் அவர்கள் காலமானமையையிட்டு எமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.   06.10.1964 இல் கருகம்பனையில் பிறந்த பொன்னையா செங்கதிர்ச்செல்வன் 06.11.2018 இல் காலமானார். அவரது இறுதி நிகழ்வு 08.11.2018 காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.   வண்ணை நாவலர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய … மேலும் வாசிக்க

கண்ணீர் அஞ்சலி – அமரர் திரு.சின்னப்பு தவராசா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.த.கருணாகரனின் தந்தையார் அமரர் சின்னப்பு தவராசா 31.102.2018 புதன்கிழமை காலமாகிவிட்டார். அமரரின் பிரிவால் துயருறும் எமது நண்பர் திரு.த.கருணாகரனினதும் அவரது குடும்பத்தினரும் பிரிவுத் துயரில் நாமும் நனைவதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பிலான  அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  மேலும் வாசிக்க

தன் எழுத்தை ஆயுதமாக்கிப் பயணித்தவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

நமது ஈழமண்ணில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி மறைந்தாலும் தம் எழுத்தால் சமூக நன்மைகளை விளைவித்தவர்கள் மிகச் சிலரே. அத்தகைய மகோன்னதமான மனிதர்களுள் மறைந்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முக்கியமானவர். தமிழ் இனம் விடுதலைக்கான குரலை உயர்த்திய போது ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பட்டு விடுதலைப்பயணத்தில் இணைந்து கொண்டார்கள். அதில் அமரர் இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் எழுத்திலக்கியத் துறையில் ஒரு கதைசொல்லியாக மட்டுமன்றி கருத்துருவாக்கம் செய்யும் இலக்கிய … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க பொருளாளர் பேராசிரியர் வேல்நம்பிக்கு கனடாவில் பொன்விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்து வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பிக்கு கனடாவில் அவரது மாணவர்களால் பொன்விழா நடாத்தப்பெற்றுள்ளது. பதிவுகளை படங்களில் காணலாம்.  மேலும் வாசிக்க

நாவலர் விழா வினாடி வினாப் போட்டி -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் பதிப்பகமும் இணைந்து அடுத்த மாத நிறைவில் (நவம்பர் 2018)  நடாத்தவுள்ள  நாவலர் விழாவை முன்னிட்டு  யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான திறந்த பிரிவு வினாடி வினாப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டி குறித்துத் தமிழ்ச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு இது ஒரு குழுநிலைத் திறந்த போட்டி ஆகும். குழு அமைப்பு முறை  ஒரு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்களைக் கொண்ட ஒரு அணியை அமைக்க … மேலும் வாசிக்க

ஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்

ஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் (இன்று 14.10.2018 அகவை 75 இனைக் காண்கிறார்) முகவுரை உணர்வாகி உயிராகிவிளங்கும் தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக உழைப்போர் பலர். எம்மண்ணில் பிறந்து எம்முடன் வாழ்ந்து உலகளாவிய தமிழ் வளர்ச்சிக்கெனப் பங்களிக்கும் தமிழ் இணையராகப் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணையரை அடையாளப்படுத்தமுடியும். இவர்களுள் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் 14.10.2018 இல் அகவை 75 இனைக் காண்பதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. … மேலும் வாசிக்க

நல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா -2018

யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.  தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி … மேலும் வாசிக்க