உலகத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கண விருது பெறுகிறார் பேராசிரியர் அ.சண்முகதாஸ்

  தமிழ் நாடு அரசு உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு ஆண்டு தோறும் உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கண விருது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இவ்விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளதாகவும் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

புலவர்மணி வை.க. சிற்றம்பலம் எழுதிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று 27.02.2021 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு திருநெல்வேலி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள அறிவாலயம் அரங்கில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் கு.பாலசண்முகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்நாள் பொருளாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதியுமான சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரவு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020 காலமானார். 10.04.1942 இல் புத்தூரில் பிறந்த இவர் தற்போது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். திருநெல்வேலியில் பேராசிரியர் வேல்நம்பியின் இல்லத்திலும் தொடர்ந்து நீர்வேலியில் மகளின் இல்லத்திலும் வசித்தார். இவரின் இறுதிக் கிரியைகள் நாளை … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினர் புலவர் அரியநாயகம் காலமானார்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினர் புலவர் அரியநாயகம் இன்று 12.08.2020 புதன்கிழமை காலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14.08.2020 நெடுந்தீவில் நடைபெறவுள்ளது. அமரரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 13.08.2020 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அமரரது இல்லத்தில் வைக்கப்படும்.  யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுள் அங்கத்தவரான புலவர்  திருநாவுக்கரசு அவர்கள் ஓய்வுபெற்ற  ஆசிரியர் என்பதுடன் தமிழ்ச் சங்க செயற்பாடுகளுக்கு குறிப்பாக … மேலும் வாசிக்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழிக் கருத்தரங்குகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுக்கும் இணையவழிக் கருத்தரங்குகள் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை வார நாள்களில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழும் தமிழரும் என்ற மையப்பொருளில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் இலங்கைத் தமிழரின் நிலை, இலங்கைத் தமிழ் இலக்கியம், இலங்கையில் தமிழர் கல்வி, இலங்கைத் தமிழ்க்கலைகள், இலங்கைத் தமிழ் ஊடகங்கள் என்ற பொருண்மைகளில் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் … மேலும் வாசிக்க

உலகத் தாய்மொழி நாள் விழா-2020

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழாவும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவரங்கமும் இன்று 20 02 2020 சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் ந. சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உலகத் தாய்மொழி நாள் குறித்த சிறப்புரையை தமிழ்ச் சங்கத்தின்  பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸும் உயர்தர மாணவருக்கான திருக்குறள் பாடப்பகுதி குறித்த கண்ணோட்ட உரையை … மேலும் வாசிக்க

பாரதி விழா புகைப்படத் தொகுப்பு….

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதிவிழா ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். நிகழ்வில் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தமிழ்க்கவிதையில் பாரதியின் புரட்சி என்ற பொருளில் சிறப்புரையாற்றினார். வரவேற்புரையை … மேலும் வாசிக்க

சிறப்புற்ற பாரதி விழா

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதிவிழா ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். நிகழ்வில் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தமிழ்க்கவிதையில் பாரதியின் புரட்சி என்ற பொருளில் சிறப்புரையாற்றினார். வரவேற்புரையை … மேலும் வாசிக்க

கலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்த விவாதச் சமர் புகைப்படத்தொகுப்பு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அமரர் கலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்தமாக 08.02.2020 சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்திய விவாதச்சமரின் முழுமைப் புகைப்படத்தொகுப்பு மேலும் வாசிக்க

தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் இன்று (08.02.2020) சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பிரபல விவாத அணிகளைக் கொண்ட பாடசாலைகளுடன் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, கொழும்பு பிரதேசப் பாடசாலைகளும் இணைந்து 22 அணிகள் போட்டியில் பங்கேற்றன. தம்பர் மண்டபத்தில் இரவு இடம்பெற்ற இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் … மேலும் வாசிக்க