உலகம் உவந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார்

thani adiபக்திக்கு மொழி சொன்ன ஒரு தமிழ்ப் பிரியரை நம்முடைய மண் உலகுக்குத் தந்துள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த ஸ்தனிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை செசில் இராசம்மா தம்பதியர்க்கு 1913ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம் நாள் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் குழந்தை பிறந்தது. அப்பிள்ளைதான் பின்னர் வண.பிதா சேவியர் தனிநாயகம் ஆனார். பக்தியின் மொழி தமிழ் என்ற சிறப்பினைத் தமிழ் அன்னைக்கு வழங்கியவர் அவர்தான். ஆங்கிலம்ää லத்தீன் போன்ற மொழிகளிலே நல்ல தேர்ச்சிபெற்ற அவர் தமிழ்மொழியைத் தனியாக ஓர் ஆசிரியரின் துணையுடன் கற்றார். தமிழ்மீது அவர் கொண்ட விருப்பு அம்மொழியிலே மிகுந்த உயர்வான அறிவினைப் பெற வேண்டுமென ஊக்குவித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, முதுஇலக்கியமாணி ஆகிய பட்டங்களைப்பெற்றார். உரோம் நகரிலே அருட்கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார்.

c2தன்னுடைய தமிழ்மொழியின் இலக்கியச் செழுமையினையும் நீண்ட பாரம்பரியத்தையும் நன்குணர்ந்த அடிகளார் அவ்வுண்மைச் செய்தியினை உலகமெல்லாம் பரப்ப வேண்டும் என்று எண்ணினார். உலகின் பல நாடுகளுக்குச் சென்று அவரவர் மொழிகளிலே தமிழ் மொழியின்ää தமிழ் இலக்கியத்தின் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக்களை எடுத்துக்கூறினார். ஆங்கிலம் லத்தீன் கிரேக்கம். இத்தாலியம் பிரெஞ்சு ஸ்பானிஷ்ஜேர்மன் ஆகிய மொழிகளிலே புலமையுடையவர்ää சமஸ்கிருதம். மலையாளம் போர்த்துக்கீசம் எபிரேயம்ää மலாய்ää ரஸ்யன் ஆகிய மொழிகளையும் அறிந்தவர். இதனால் அவருடைய தமிழ்த்தூது பயனுடையதாக அமைந்தது. இவ்வாறு அவர் மேற்கொண்ட தமிழ்த்தூது பயண அனுபவங்களையெல்லாம் தமிழ்த்தூது எனும் நூலாக எழுதி வெளியிட்டார்.
பிற மொழியினர் தமிழ்ப் பண்பாட்டினை அறிந்துகொள்வதற்காக Tamil Culture (தமிழ் பண்பாடு) என்னும் ஆய்விதழை 1952ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடத் தொடங்கினார். இவ்விதழ் மூலம் தமிழ்மொழிää இலக்கியம்ää பண்பாடு பற்றி அறிந்த மேலைத்தேய ஆய்வாளர் பலர் தமிழாய்விலே ஈடுபடலாயினர். இத்தகைய ஆய்வு முயற்சிகள் பெருகிவரும் வேளையிலே தான் அடிகளார் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒன்றின் தேவையை உணர்ந்தார்.
1964ஆம் ஆண்டில் கீழைத்தேய ஆய்வு மகாநாடு புதுடில்லியிலே நடைபெற்றது. இம் மாநாட்டிலே பங்குபற்றிய பேராசிரியர் ஷான் பிலியோசாää கலாநிதி றொன் ஆஷர்ää பேராசிரியர் தொமஸ் பறோ. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளைää பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரன்ää பண்தர் க.பொ.இரத்தினம் ஆகியோரை ஒன்றுகூட்டி அம்மாநாடு முடிந்தவுடன் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் அமைப்பதற்குரிய ஆலோசனைகளை அடிகளார் நடத்தினார். மன்றம் அமைக்கப்பட்டது. முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டினை மலேசிய அரசின் துணையுடன் கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு நடத்தினார். தொடர்ந்து எட்டுத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்து முடிந்துவிட்டன. பெருந்தொகையான தமிழியல் ஆய்வுகள் வெளியாகி யுள்ளன. உலகின் பல பல்கலைக்கழகங்களிலே தமிழ்த்துறைகள் தொடக்கப்பட்டன. தனிநாயக அடிகளாரின் தொலைநோக்குடைய தமிழ்ப்பணியின் பயன்களை நாம் இப்பொழுது கண்கூடாகக் காண்கிறோம்.
1952ஆம் ஆண்டு முதல் 1961வரை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறையிலே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அங்குதான் 1959இல் அவரை நான் காணுகின்ற வாய்ப்புப் பெற்றேன். அவருடைய முகத்திலே அருள் ஒளியும் கல்விப் பொலிவும் நிறைந்திருந்ததை சிறியவன் ஆகிய நான் அன்று உணர்ந்துகொண்டேன். அவர் 1961இல் மலாயாப் பல்கழகத்தின் இந்தியவியல் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் சென்றார். நான் 1963இல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துணை விரிவுரையாளராகப் பணியாற்றும்போது மலாயாப் பல்கலைக் கழகத்துக்கு வரும்படி அழைப்பு அனுப்பினார். என்னுடைய விதி அப்பொழுது அங்கு செல்ல முடியவில்லை. 1970 ஆம் ஆண்டு 3ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறவிருந்தது. அதற்கு அறிஞர்களை அழைப்பதற்கு எடின்பறோப் பல்கலைக் கழகத்துக்கு அடிகளார் வந்தார். அப்பொழுது நான் அங்கு கலாநிதிப் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தேன். என்னுடன் மிகுந்த அன்புடன் தமழிலே பேசினார். மாநாட்டுக்கு வரும்படியும் விமானää பாரிசில் தங்குவதற்கான வசதிகளையும் தான் செய்து தருவதாகவும் கூறினார். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. பாரிசில் நடைபெற்ற 3ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளார் பிரெஞ்ச் மொழியிலே தன்னுடைய கணீரென்ற குரலில் உரையாற்றி மாநாட்டைத் தொடக்கிவைத்தது இன்றும் மனதிலே பதிந்துள்ளது. அடிகளார் அக்காலத்தில் வளலாயில் அமைந்திருந்த மறைமாவட்ட வீட்டிலே தங்கியிருப்பார். நான் அவரை அங்கு சென்று காணுவது வழக்கம். இளையவர்களாகிய நாம் என்ன செய்யவேண்டுமென பல ஆலோசனைகள் சொல்வார். அவர் செய்த தமிழ்ப் பணிகளைப்போல நாங்கள் செய்வோமோ? என நான் எண்ணுவதுண்டுää
தமிழ் ஆய்வு வளர்ச்சியிலே தவத்திரு தனிநாயக அடிகளாரின் பங்களிப்புக் கணிசமாக அமைந்துள்ளது. மறையியலிலே தனது ஆய்வினைத் தொடங்கிய அடிகளார் தமிழியலியலும்ää கல்வியியலிலும் ஆய்வுகள் பல மேற்கொண்டு உள்ளார். தமிழியலிலே அவர் மேற்கொண்ட ஆய்வுகள் பன்முகப்பட்டன. ஐரோப்பியக் கலைää மறையியல் வலியுறுத்தும் மனிதாயம் ஆகியவற்றிலே பயிற்சி பெற்ற அடிகளார் தமிழியல் ஆய்விலே ஈடுபட்டபோது எமது பண்டைத் தமிழிலக்கியங்கள் பிரதிபலிக்கும் தமிழ் நாட்டின் இயற்கை அழகுää தமிழரின் அழகுணர்வுää அவர்களுடைய மனிதாய ஆளுமை இயல்புகள் ஆகியவற்றிலே ஈடுபாடு கொண்டது ஆச்சரியமில்லை.
அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் முதுமாணிப் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு Master of Letters என்னும் பட்டத்திற்காக “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்னும் விடயம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பண்டைத்தமிழ் இலக்கியங்களிலே மனிதாயப் பண்புகளிலே ஈடுபாடுகொண்ட அடிகளார் அவ்விலக்கியங்கள் சித்திரிக்கும் இயற்கையினை மக்களின் ஆளுமை இயல்புகளுடன் தொடர்புறுத்தியே நோக்கினார். சங்கப் பாடல்கள் என்றவுடன் போரையும் காதலையும் குறிப்பிடும் பாடல்களையே எண்ணுகின்ற வழக்கம் இருந்தது. அடிகளார் இப்போக்கிலிருந்து மாறுபட்டவர். பழந்தமிழ் மக்களின் ‘ஒன்றே உலகம்’ என்னும் பரந்த நோக்குää கண்ணோட்டம்ää அவர்களுடைய நிறைää நீதி. கல்விக்கொள்கை ஆகியவற்றைப் பறைசாற்றும் பாடல்களிலே அவர் ஈடுபட்டார். சங்க இலக்கியங்களிலே தலைவன் தன் தலைவியின் நலம் பாராட்டும்பொழுது அதனைத் தனக்கு விருப்பமான ஊருடன் அல்லது நகரத்துடன் ஒப்பிடுவது வழக்கம். இதனை அடிகளார் தான் கற்ற மேலைத்தேய செம்மொழி இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்: “ஏட்ரியாற்றிக் கடற்கரையில் எழுந்த வெனீஸ் மாநகர மாந்தர் அக்கடலினைத் தம் நகரின் தலைவியாகப் பாராட்டியதுபோலவேää நம் தமிழ் மன்னரும்ää தமிழக மக்களும்ää நம் ஆறுää கடல்ää ஊர் முதலியவற்றை அன்புடன் பாராட்டிவந்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
சங்கப் பாடல்களில் ஈடுபட்டதுபோலத் திருக்குறளிலும் அவர் மனம் ஆழமாகச் சென்றது. வள்ளுவனுடைய குறள் கூறும் நல்ல வழிகளையும் அவருடைய கத்தோலிக்க சமயங்காட்டும் நல்ல வழிகளையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய வாய்ப்பு அவருக்கிருந்தது. இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களைத் துருவி ஆராய்ந்த அடிகளார்ää அவ்விலக்கியங்களின் அடிப்படையாக அமைந்த கோட்பாடுகளைத் தன் கட்டுரைகளிலும் பேருரைகளிலும் எடுத்துக் காட்டினார். அமரராவதற்குச் சற்று முன்பாக அடிகளார் “தமிழர் பண்பாட்டின் கோட்பாடுகள்” என்னுந் தலைப்பிலே தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்தும் கண்ணோட்டம் என்னும் இயல்பினை அவர் விரிவாக எடுத்து விளக்கினார். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ஈடுபட்டதுபோல அடிகளார் நவீன தமிழ் இலக்கியங் களிலும் ஈடுபட்டார். நவீன தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் அடிகளாருக்கு முள்ள தொடர்பினை “Urbanism in Dr.Varatarajans’s Novels” என்னும் அவருடைய கட்டுரை நன்கு எடுத்துக்காட்டுவதாயுள்ளது.
தனிநாயகம் அடிகளாருடைய பெரும்பாலான ஆய்வு முயற்சிகள் தமிழர் வரலாறுää தமிழர் நாகரிக வளர்ச்சி பற்றியனவேயாகும். பிற நாடுகளில் வாழும் தமிழர் பற்றிய ஆய்வு சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்த்தூது மேற்கொண்ட அடிகளார் தான் சென்ற இடங்களிலே வாழும் தமிழர்கள் பற்றிய தகவல்கைளச் சேர்க்கத் தவறவில்லை. அவர்களுடைய வாழ்நிலைää பிரச்சினை பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டுவதில் ஈடுபட்டார். அத்துடன் தமிழ்மொழி வரலாற்றுக்குத் தேவையான தகவல்களையும் திரட்டினார். பிற நாடுகளிலே வாழும் தமிழர்கள் பற்றிய தமது ஆய்வு முடிவுகளை அடிகளார் 1970ல் பரிஸ் நகரிலே நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலே“The Study of Contemporary Tamil Groups – A Survey” என்னுங் கட்டுரையாகச் சமர்ப்pத்தார்.
தென்கிழக்காசிய நாடுகளாகிய கம்போடியாää வியட்நாம்ää இந்தோனேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி தமிழ்த் தூது மேற்கொண்ட அடிகளார்ää அங்குள்ள கலாசாரத்தினை நேரிலே தரிசிக்கவும் அதனைப் பிற கலாசாரங்களுடன் ஒப்பிட்டு நோக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. அடிகளாருடைய இந்த ஆய்வு ஊக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்தியவியல் துறை முன்னாள் பேராசிரியர் சிங்காரவேலு பொன்ற அறிஞர்கள் தென்கிழக்காசிய கலாசாரத்தினை இந்திய கலாசாரத்துடன் ஒப்பிட்டு ஆராய வழிவகுத்தது.
அடிகளார் தமிழ்மொழிää இலக்கியம்ää வரலாறுää பண்பாடு ஆகியனவற்றிலே ஈடுபட்டதுபோலக் கல்வித்துறையிலும் பெருமளவு ஈடுபாடு கொண்டார். குருத்துவப் பட்டம் பெற்று உயர்தரப் பாடசாலை ஆசிரியராகத் தொடங்கிய அடிகளார் 1952ல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறை விரிவுரையாளராகக் கடமையேற்றார். தமிழர் கல்வி முறைபற்றி ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர் லண்டன் பல்கலைக்கழகத்திலே பண்டைய ஐரோப்பிய இந்திய கல்வி முறைகளை தமிழ்க் கல்வி முறைக்கு விசேட தொடர்பு காட்டி ஒப்பிட்டு ஆராய்ந்து 1957ல் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவ பாரம்பரியத்திலே தோன்றியவர்கள் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும் தவத்திரு தனிநாயக அடிகளாருமாவர். இவர்கள் இருவரையும் பற்றி டாக்டர் வே.அந்தனிஜான் அழகராசன் அடிகள் பின்வருமாறு (தொண்டன்ää 1980) கூறுகிறார்.
“இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் திருச்சபை ஈன்றெடுத்த இருபெரும் நிதிகள்ää இருபெரும் அறிவுக் களஞ்சியங்கள் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும்ää தமிழ்த் தூது தனிநாயக அடிகளுமாவார். இருவரும் கிறிஸ்தவத்தையும்ää தமிழையும் தங்கள் இரு கண்களெனப் போற்றிய பண்பாளர்கள்.”
தமிழிற்குத் தொண்டு செய்வோர் இறப்பதில்லை என்பதற்கு இவர்களின் வாழ்வியலைச் சான்றாகக் காட்டலாம்.

A.Shanmugathas

 

பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாஸ்

பெருந்தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

Bookmark the permalink.

Comments are closed