திருக்குறள் தேர்வு 2019 இன் முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் உயர்தர மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை (02.03.2019) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் 26 உயர்தரப் பாடசாலைகளில் இருந்து  800 பேர் விண்ணப்பித்து 620 பேர்  தோற்றிய இத்தேர்வின் பிரகாரம் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ளவர்களுகக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் எதிர்வரும் சனிக்கிழமை (09.03.2019) தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளது. 

பரிசில் பெறவுள்ளவர்களின் விபரம் வருமாறு –

முதலாம் இடம் :- நிவேதித்தா யோகன் (கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி),

இரண்டாம் இடம் – வர்ணிகா உமாச்சந்திரன் (யாழ்.இந்து மகளிர் கல்லூரி)

மூன்றாம் இடம் – நிருஜா குயின்ரன் (வேம்படி மகளிர் கல்லூரி)

                                      ஸ்ரீதரன் அனுசியா (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி),

நான்காம் இடம் – சண்முகப்பிரியா சண்முகம் (புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி),

ஐந்தாம் இடம் – அபிநயா ஸ்ரீதர் (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி),

ஆறாம் இடம் – பாலச்சந்திரன் ராகவன் (கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி),

                                 ஜெயப்பிரியா கோபாலகிருஸ்ணண் ( யாழ்.இந்து மகளிர் கல்லூரி)

ஏழாம் இடம் – தனுஜா சிவராசசிங்கம் (கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி),

                                லக்சனா ஜேசுராஐா (யாழ்.இந்து மகளிர் கல்லூரி)

எட்டாம் இடம் – பிரியதர்சினி யோகநாதன் (வேம்படி மகளிர் கல்லூரி),

                                  கிருஷா ஜோதிலிங்கம் (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி),

                                 அனிஸ்ரிகா சிறிஸ்கந்தராசா (மகாஜனக் கல்லூரி) 

                                 ரவிச்சந்திரன் சஜீவினி (வயாவிளான் மத்திய கல்லூரி),

                                விஜயசோதி மதுமிதா (மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை)               

                              ஜெயகாந்தன் அபினா (இளவாலை மெய்கண்டான் ம.வி.)

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*