சிறப்புற்ற சிவபூமிக் கலைநிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்ட சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் ஆசியுரையை வழங்கியதுடன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ந.கணேசமூர்த்தி வழங்கினார். நிகழ்வில் அரும்பொருளகம் – நமது பாரம்பரியத்தை பேண்தகு களம் எனும் தலைப்பில் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர்.அ.சண்முகதாஸ் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலமையில் தொன்மை மறவோம் எனும் தலைப்பிலான கவியரங்கம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கவிஞர்களான திரு.த.ஜெயசீலன் திரு.ச.முகுந்தன்,திரு.நாக.சிவசிதம்பரம் மற்றும் திருமதி தர்மினி ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தொடர்ந்து தமிழ்ச் சங்க தலைவர் செந்தமிழ்சொல்லருவி ச.லலீசன் தலமையில் தலைமுறை கடந்தும் தம் வாழ்வியலை தக்க வைக்கும் பண்பியல் தமிழர்களிடையே பெருகி வருகின்றதா? அருகி வருகின்றதா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பேச்சாளர்களான திரு.வை.விஜயபாஸ்கர், திரு.கு.பாலசண்முகன், திரு.இ.சர்வேஸ்வரா, திரு.ந.ஐங்கரன், திரு.தெ.ஹர்சன், திரு.ஜீவா.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் நன்றியுரையை தமிழ்ச் சங்க பத்திராதிபர் திரு.லோ.துசிகரன் நிகழ்த்தினார். நிகழ்வில் நல்லை ஆதீன குருமுதல்வர் உள்ளிட்ட பல பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர். 

நிகழ்வின் பதிவுகளை கீழே காணலாம்.

 

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*