காரை கவிஞர் வடிவழகையனின் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வடிவழகையனின் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது. 
 
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒரு துண்டு வானம் நிறைய நிலா , குறும்பா கொஞ்சம் குறும்பா ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன
 
நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்ச் சங்கத்தின் பெருந் தலைவர் பேராசிரியர் அ சண்முகதாஸ் கலந்து கொண்டார். தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆசியுரை வழங்கினார். வெளியீட்டு உரையை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா மற்றும் கவிஞர் வேல் நந்தகுமார் ஆற்றினார். மதிப்பீட்டு உரைகளை கவிஞர் கலாநிதி ச. முகுந்தன் ,  மூத்த விரிவுரையாளர் ஈ. குமரன் ஆகியோர் ஆற்றினர். 
 
ஒரு துண்டு வானம் நிறைய நிலா நூலின் முதற் பிரதியை கிருபா லேணர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரனும் குறும்பா கொஞ்சம் குறும்பா நூலின் முதற் பிரதியை காரை இந்துக் கல்லூரி முதல்வர் அ. ஜெகதீஸ்வரனும் பெற்றுக் கொண்டனர். 
 
நிகழ்வின் நிறைவில் கடவுளுக்கொரு கடிதம் என்ற தலைப்பில் வடமாகாண விவசாய அமைச்சு செயலாளர் கவிஞர் அ. சிவபாலசுந்தரன் தலைமையில் கவிஞர்களான வேலணையூர் தாஸ் , வவுனியா சஜாத் குரும்பையூர் ஐங்கரன் சிவசேகரன் ஆகியோர் பங்கேற்ற கவியரங்கம் இடம்பெற்றது
 
 நிகழ்வில் நூற்றுக்கணக்கான கவிதை ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 
ஏற்கனவே கவிஞர் வடிவழகையனின் முகில் எனக்கு துகிலாகும் என்ற கவிதை நூல் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது என்பதுவும் அந்நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றிருந்தது என்பதுவும் குறிப்பிடத் தக்கன.
 
 
Bookmark the permalink.

Leave a Reply