சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா…

b1யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற இடம்பெற்றது.

நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் கு.பாலஷண்முகன் தமிழ்த்தெய்வ வணக்கம் இசைத்தார். வரவேற்புரையை இந்துநாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் வாழ்த்துரையைத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் வழங்கினர்.

விழாவில் யாழ்ப்பாணத் தமிழச் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் தொடக்கிவைக்கப்பட்டது. இணையத்தளத்தைத் துணைவேந்தர் தொடக்கி வைக்க அறிமுகவுரையை மருத்துவபீடப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா வழங்கினார். தொடர்ந்து இணையத்தளத்தை வடிவமைத்த தங்கராஜா தவரூபனுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றது.

அண்மையில் பீமரத சாந்திவிழாக் கண்ட தமிழ்ச்சங்க உறுப்பினர் சிவஸ்ரீ சோ.இ.பிரணதார்த்திஹரக் குருக்கள் தம்பதியர் வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

பாரதி யார்? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் சிறப்புரை, இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் நடனத்துறையைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கிய புதுமைப்பெண்கள் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் பார்த்தோரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் மிகச் சிறப்பாக மேடையேறியது. யாழ். வளரும் முன்னணிக் கலைஞர்கள் பல்வகையான பக்கவாத்தியங்களுடன் இணைந்து வழங்கிய நல்லதோர் வீணை என்ற பொருளில் அமைந்த பாரதி பாடல்களால் ஓர் இசை அர்ச்சனை நிகழ்வும் உணர்வு பூர்வமானதாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி இணைப்பாளர் பா.பாலகணேசன் நன்றியுரை நல்கினார். தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.

நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அருட்தந்தையர்களான எஸ்.ஜெயசேகரம் அடிகள், செ.அன்புராசா அடிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கைலாசபதி கலையரங்கின் அண்மைக்கால வரலாற்றில் மிக அதிகளவான பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வு இதுவே எனத் துணைவேந்தர் தனது வாழ்த்துரையில் பாராட்டிக் குறிப்பிட்டிருந்தார்.

Bookmark the permalink.

One Comment

  1. Sarveswara Ratnasingam

    “இணையம் பார்த்தேன் மிக நல்ல வடிவமைப்பு. வாழ்த்துக்கள்.”
    வேதநாயகம் தபேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*