யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு விழா யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த 29.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சு.கபிலன் தமிழ்த்தெய்வ வணக்கம் இசைத்தார்;. யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். மாங்குளம் அமதி … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. யாழ். பெரியகடை சிவகணேசன் புடைவையகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் நடைபெற்றது. . நிகழ்வின் அனுசரணையாளரான கனகசபை அருள்நேசன் மங்கலவிளக்கேற்றினார். ஊர்காவற்றுறை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.தயாபரன் தமிழ் வணக்கம் இசைத்தார். யாழ். பல்கலைக்கழக … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் வள்ளுவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 15.03.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்க பெருந்தலைவருக்கு பவள விழா

கனடாவில் பெரிய சிவன் கோவிலில் கடந்த் 24.01.2015 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந்தலைவருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அகவை எழுபத்தைந்து எய்தியமையிட்டான பவளவிழா இடம்பெற்றது. . வண.பேராசிரியர் ஏ.ஜெ.வி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தமிழில் மொழிபெயர்த்த யப்பானியக் காதல் பாடல்கள் என்ற நூல் வெளியிட்டுவைக்கப்பபட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தும்பளை மற்றும் திருகோணமலை நலன்புரிச் சங்கங்கள் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்க காப்பாளர் பேராசிரியர் சண்முகதாசுக்கு வாழ்த்துக்கள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அகவை எழுபத்தைந்தை அடைந்தார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு நற்பணியாற்ற தமிழ்த்தாய் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம்.  வாழ்த்துக் கவியாக்கம்  செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் – பொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் வேல்நம்பிக்கு இரட்டை விருதுகள்…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி பாங்கொக்கில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். பாண்டிச்சேரியைத் தலைமையகமாகக் கொண்ட விஞ்ஞானிகள் அபிவிருத்தியாளர்கள்; சர்வதேச பீடத்தின் (Association of Scientists, Developers and Faculties) (ASDF) மாநாடு பாங்கொக்கில் உள்ள ஹொலிடே இன் ஐந்து நட்சத்திர விடுதியில் 30.12.2104 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது சிறந்த கல்விசார் பீடாதிபதி மற்றும் சிறந்த கல்விசார் ஆய்வாளர் என்ற இரண்டு … மேலும் வாசிக்க

நல்லையில் சிறப்புற்ற தமிழ்ச்சங்க நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர்விழா 14.12.2014 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. கரிகணன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் சி. ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் ஹேமலதா கண்ணதாசன் தமிழ்த்தெய்வ வணக்கத்தையும் தமிழ்ச்சங்கப் பொருளாளர் விரிவுரையாளர் ச.லலீசன் வரவேற்புரையையும் வழங்கினர். நாவலரின் பன்முக ஆளுமை என்ற பொருளில் உரும்பிராய் … மேலும் வாசிக்க

கவிதைப் பட்டறை கவிதைப் போட்டி முடிவுகள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையும் இணைந்து நடாத்திய கவிதைப் பட்டறையின் முடிவில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரிவு கீழ்ப்பிரிவு முதலாம் இடம்  நேமிதா இரவீந்திரமூர்த்தி – தரம் 11 இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் பிரதாஐினி முத்தமிழ்ச்செல்வன் – தரம் 11 யாழ்.இந்து மகளிர் கல்லூரி மூன்றாம் இடம் பவதாரணி பிரதீபன் – தரம் 10 மகாஐனக் கல்லூரி பிரிவு மேற்பிரிவு … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் நடாத்தும் நாவலர் விழா

கரிகணண் நிறுவன ஆதரவில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.12.2014) நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச் சங்கதலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் மங்கல விளக்கினை திரு.திருமதி.சி.ராஐ்குமார் தம்பதிகள் ஏற்றவுள்ளனர். தமிழ்த் தெய்வவணக்கத்தை திருமதி.ஹேமலதா கண்ணதாசனும் வரவேற்புரையை தமிழ்ச் சங்க பொருளாளர் திரு.ச.லலீசனும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் உரும்பராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.தி.செல்வமனோகரன் நாவலரின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற கவிதைப் பட்டறை…

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கவிதைப் பட்டறை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ‘தமிழ்க் கவிதை மரபும் மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கவிதைப் பட்டறை 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இடம்பெற்ற … மேலும் வாசிக்க