சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா -2015

சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா 
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆறுமுகநாவலர் விழர் 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவரும் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழா அனுசரணையாளரான கரிகணன் அச்சக அதிபரின் துணைவியார்; திருமதி யாழினி ராஜ்குமார் மங்கலவிளக்கேற்றினார். மக்கள் வங்கி உத்தியோகத்தர் சி.சசீவன் நாவலர் வணக்கப்பா இசைத்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந.ஜங்கரன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தொடக்கவுரையையும் ஆற்றினர்.
 ‘நாவலர் கனவு’ என்ற பொருளில் சிரேஷ்ட பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமாகிய நா.சண்முகலிங்கன் சிறப்புரையாற்றினார்.
நாவலர் வழியில் நாம் நடக்க பெரிதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவரின் எப்பணி என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவர் கலாநிதி; ஆறு.திருமுருகன் தலைமையில் கருத்தாடற்களம் இடம்பெற்றது.  இதில் ஆன்மீகப் பணியே என கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகனும், கல்விப் பணியே என சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி ஆசிரியர் ச.மார்க்கண்டுவும், சமூகப்பணியே என யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜாவும், அரசியல் பணியே என உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரனும் கருத்துரைத்தனர்.
நிறைவு நிகழ்வாக கலைமாமணி சிறுப்பிட்டியூர் சத்திதாஸ் வில்லிசைக் குழுவினர் வழங்கிய காலத்தை வென்ற காவலன் என்ற பொருளில் வில்லிசை இடம்பெற்றது. . தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலஷண்முகன் நன்றியுரை ஆற்றினார். தமிழ்ச்சங்க பத்திராதிபர் இ.சர்வேஸ்வரா நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
01 B 01 C 01 D 02 A 02 B 02 C 03 A 03 04 05 06 07 08 09 10
Bookmark the permalink.

Leave a Reply