சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா கடந்த 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர்  ச.லலீசன் தலைமையில்  நடைபெற்றது.  ஒருமுகப் பறை நடனத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் சிறப்புரையை வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனைகள் என்ற பொருளில் கொட்டகல ஆசிரிய கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லியும் ஆற்றினர்.    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட திருக்குறள்  தேர்வு முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் கடந்த 20.05.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வின் முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பில் அழுத்தி PDF file வடிவத்தில் பார்வையிட முடியும். 60 புள்ளிகளுக்கு மேற்பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் எதிர்வரும் 27.05.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் வள்ளுவர் விழாவில் வழங்கப்படும்.  நாற்பது புள்ளிகளுக்கு மேற்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் விரைவில்  சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அருணோதய மாணவன் முதலிடம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முதலாம் இடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன் நி.சிவாஜனும் இரண்டாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி ர.நிவேதாவும் மூன்றாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி கோ.யனோவாவும் நான்காம் இடத்தை கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவி யோ.நிவேதிதா மற்றும் மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கத் தலைவர் விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மலையகக் கிராமிய நடனம், திருக்குறளும் முகாமைத்துவமும் என்ற பொருளில் அமைந்த ஆய்வரங்கம், கொட்டகலை ஆசிரிய கலாசாலை ஆசிரியர்கள் வழங்கும் நாட்டிய நாடகம் என்பன இடம்பெறவுள்ளன.  நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – தமிழாசிரியையின் பிரிவுக்காக அமைதிப் பிரார்த்தனையுடன் ஆரம்பம்

உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெற்றது.   740 மாணவர்கள் பங்கேற்பதற்காக விண்ணப்பித்து அதில் 650 பேர் தேர்வுக்குத் தோற்றினர்.   தேர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் அகாலமரணமடைந்த தமிழாசிரியை கவிதா ஜெயசீலனின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதிப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர். … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி 20.05.2018 ஞாயிறு 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் உயர்தரத்தில் தமிழ் கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் திருக்குறள்  போட்டி எதிர்வரும் 20.05.2018  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. சுட்டெண் இல. தி 318 வரையுள்ளவர்களுக்கு இரசாயனவியல்துறை மண்டபத்திலும் தி.454 வரை முகாமைத்துவ பீட மண்டபத்திலும் தி 592 வரை வர்த்தகத்துறை (பல்கலைக்கழகப் பின்புறம்) மண்டபத்திலும் தி 740 வரை மருத்துவபீடப் பரீட்சை மண்டபத்திலும் போட்டி நடைபெறும் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்க உபதலைவர்கள் பல்கலைக்கழக பேரவைக்கு நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர்களான  கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருட்பணி ஜெறோம் செல்வநாயகம் அடிகள் ஆகியோர் பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணி சிறக்க தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.  மேலும் வாசிக்க

உயர்தர மாணவர்களுக்காகத் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருக்குறள் போட்டி  

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ். சிவகணேசன் புடைவையகத்துடன் இணைந்து நடத்தும் திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் பங்கேற்க விரும்பும் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.    2018 ஆம் ஆண்டில் அல்லது 2019 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பாடசாலை ரீதியாகப் போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும். புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக உயர்தர தமிழ்ப் பாடவிதானத்திற்கு உட்பட்ட வகையில் போட்டி அமையும்.    போட்டியில் பங்கேற்பதற்கான … மேலும் வாசிக்க