கலாநிதி க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாகார்த்த பாடசாலை மட்ட விவாதச் சுற்றுப்போட்டி– 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாகநடத்தப்படும். பாடசாலைமாணவர்களுக்கானது திறந்தபோட்டி– 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிமுறைகள் ஒருஅணியில் ஐவர் இடம் பெறவேண்டும் போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்புபட்டியலில் இருப்பர். தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் முன்னரே வழங்கப்படும். ஆனால் போட்டித் தினத்தன்று வழங்கப்பட்ட தலைப்புக்களில் ஒன்று நடுவர்களால் முடிவுசெய்யப்பட்டு வழங்கப்படும். அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கான … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்தும் திறந்த பிரிவு விவாதச் சுற்றுப்போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப் போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படும். பாடசாலை மாணவர்களுக்கானது திறந்த போட்டி – 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது போட்டி தொடர்பான விதிமுறைகள் திறந்த பிரிவினருக்கான போட்டி விதிமுறைகள் 35 வயதுக்குட்பட்ட பாடசாலையை விட்டு விலகிய இருபாலாரும் பங்குபற்றலாம். (30.09.1984 க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்) ஒரு அணியில் ஐவர் இடம்பெற வேண்டும் போட்டியில் மூவர் … மேலும் வாசிக்க

சைவம் தழைத்தோங்க நிறைவு நிகழ்வு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சிக் குழுமமும் இணைந்து முன்னெடுத்த சைவம் தழைத்தோங்க நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் கடந்த 30.09.2019 நல்லூர்க் கந்தன் தீர்த்தத் திருவிழா நாளில் இடம்பெற்றது. நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், உபதலைவர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ். டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ். குகநாதன், தமிழ்ச்சங்கத் தலைவர் ச. லலீசன், செயலாளர் இ.சர்வேஸ்வரா, இசைப்பேரறிஞர் கலாநிதி நா.வி.மு. நவரத்தினம் நிறைவு நிகழ்வுக்கான பரிசுக் கொடையாளர் செல்லத்துரை … மேலும் வாசிக்க

நல்லூரில் டான் தொலைக்காட்சி – தமிழ்ச்சங்கம் இணைந்து சைவம் தழைத்தோங்குக செயற்பாடு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சியின் ஓம் தொலைக்காட்சி அலைவரிசையும் இணைந்து முன்னெடுக்கும் சைவத்தழைத்தோங்குக செயற்பாட்டின் தொடக்க நாள் நிகழ்வுகள் 06.08.2019 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு ஆரம்பமாகின.  . இந் நிகழ்வு தொடர்ந்து ஓம் தொலைக்காட்சியின் ஊடாக நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டவண்ணமுள்ளது.  . நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பருத்தித்துறை வீதி கோவில் வீதி சந்திக்குச் சமீபமாக (லிங்கம் கிறீம் ஹவுஸ் அருகாக) டான் தொலைக்காட்சியின் கலையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு 7 … மேலும் வாசிக்க

சிறப்புற்ற ஆடிப்பிறப்பு விழா -2019

 யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப்புலவர் நினைவரங்கமும் 16.07.2019 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்க உறுப்பினர்  ஐீவா.சஐீவன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புலவரின் சிலைக்கு தமிழ்ச் சங்க பெருந்தலைவர் தகைசார் பேராசி்ரியர் அ.சண்முகதாசும் பாடசாலை நிறுவுனரின் சிலைக்கு பாடசாலை அதிபர் திரு.கிருஸ்ணாணந்தாவும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து இறைவணக்கம் தமிழ்த் தெய்வ வணக்கத்தை நவாலி மகாவித்தியாலய மாணவிகள் நிகழ்த்தினர். வரவேற்புரையை … மேலும் வாசிக்க

இனம் மதம் மொழி கடந்து ஒன்றிணைந்து வன்முறைக் கலாசாரத்தை ஒழிப்போம்

கிறிஸ்தவ மக்களின் புனித வழிபாட்டுக்குரிய நாளான ஈஸ்டர் நாளில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் மனித நேயம் கொண்ட அனைவரினது இதயத்தையும் சுக்குநூறாக்கியுள்ளது. மனஅமைதி வேண்டி வாழ்வில் செழுமை வேண்டி இறைபிரார்த்தனையில் ஈடுபட்ட வேளை நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களினால் உறவுகளைத் தொலைத்து அல்லறும் அப்பாவிகளின் இடத்தில் எம்மை வைத்து உணரும் போது இதயத்தின் வேதனை இன்னும் இரட்டிப்பாகின்றது. ஏனோ தெரியவில்லை இலங்கை தேசத்தில் ஏப்பிரல் மே மாதங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற திருவள்ளுவர் விழா- 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த 09.03.2019 சனிக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. யாழ். சிவகணேசன் புடைவைகயத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்விற்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமை தாங்கினார். நிகழ்வில் கடவுள் வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.பரந்தாமன் இசைத்தார். வரவேற்புரையை தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வராவும் முதன்மையுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் ஆற்றினர். சிறப்பு நிகழ்வாக தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கியச்சுடர் … மேலும் வாசிக்க

திருக்குறள் தேர்வு 2019 இன் முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் உயர்தர மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை (02.03.2019) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் 26 உயர்தரப் பாடசாலைகளில் இருந்து  800 பேர் விண்ணப்பித்து 620 பேர்  தோற்றிய இத்தேர்வின் பிரகாரம் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ளவர்களுகக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் எதிர்வரும் சனிக்கிழமை (09.03.2019) தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளது.  பரிசில் பெறவுள்ளவர்களின் விபரம் வருமாறு – முதலாம் இடம் … மேலும் வாசிக்க

தமிழ்த் துறைப் பேராசிரியரான கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனுக்கு தமிழ்ச்சங்கத்தின் வாழ்த்துக்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பேராசிரியராகப் பதிவியுயர்வு பெற்றுள்ள கலாநிதி ஸ்ரீ பிரசாந்தனுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று பின்னர் ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகக் கடமையாற்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றவர். அகில இலங்கை கம்பன் கழகத்தின் அமைப்பாளராகச் செயற்படும் இவர் தமிழ் உலகம் … மேலும் வாசிக்க