சைவம் தழைத்தோங்க நிறைவு நிகழ்வு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சிக் குழுமமும் இணைந்து முன்னெடுத்த சைவம் தழைத்தோங்க நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் கடந்த 30.09.2019 நல்லூர்க் கந்தன் தீர்த்தத் திருவிழா நாளில் இடம்பெற்றது. நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், உபதலைவர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ். டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ். குகநாதன், தமிழ்ச்சங்கத் தலைவர் ச. லலீசன், செயலாளர் இ.சர்வேஸ்வரா, இசைப்பேரறிஞர் கலாநிதி நா.வி.மு. நவரத்தினம் நிறைவு நிகழ்வுக்கான பரிசுக் கொடையாளர் செல்லத்துரை திருமூர்த்தி (திவ்ய மகால் உரிமையாளர்) டான் தொலைக்காட்சியின் கணக்காளர் அ. செல்வச்சந்திரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

24 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட வினாடிவினாப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசுப்பொருள்கள் வழங்கியும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். முதலாம் பரிசை சதுர்த்திகா விமலநாதனும் இரண்டாம் பரிசை இந்திரஜித் கார்த்திகனும் மூன்றாம் பரிசை விவேகானந்தராசா கதிர்சனும் பெற்றுக்கொண்டனர்.

சைவம் தழைத்தோங்க நிகழ்ச்சியைத் திறம்படத் தொகுத்து வழங்கிய டான் தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் சௌமியா தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தம்பதியரால் பாராட்டப்பட்டார்.

Bookmark the permalink.

Leave a Reply