கலாநிதி க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாகார்த்த பாடசாலை மட்ட விவாதச் சுற்றுப்போட்டி– 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாகநடத்தப்படும்.

 1. பாடசாலைமாணவர்களுக்கானது
 2. திறந்தபோட்டி– 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது

பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிமுறைகள்

 1. ஒருஅணியில் ஐவர் இடம் பெறவேண்டும்
 2. போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்புபட்டியலில் இருப்பர்.
 3. தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் முன்னரே வழங்கப்படும். ஆனால் போட்டித் தினத்தன்று வழங்கப்பட்ட தலைப்புக்களில் ஒன்று நடுவர்களால் முடிவுசெய்யப்பட்டு வழங்கப்படும்.
 4. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கான தலைப்புக்கள் உடன் வழங்கப்பட்டுத் தயார்ப்படுத்தலுக்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

விவாதிகளுக்கான நேர அளவு

01           தலைவர் – தொடக்கவுரை   5 நிமிடம்

02           இணைவிவாதி   4 நிமிடம்

03           நிறைவுவிவாதி  4 நிமிடம்

01           தலைவர் – தொகுப்புரை     3 நிமிடம்

போட்டிக்கான விண்ணப்பங்கள் உரியவகையில் நிறைவுசெய்யப்பட்டு அதிபரின் உறுதிப்படுத்தலுடன் 30.10.2019க்கு முன்னதாக அஞ்சல் மூலமாக

தலைவர்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

இல 28 குமாரசாமிவீதி

கந்தர்மடம்

யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

 • விண்ணப்பங்களைத் தமிழ்ச் சங்க இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
 • தெரிவுப்போட்டிகளுக்கு முன்னதாக விவாதிகளை திசைமுகப்படுத்துவதற்காக பயிற்சிப்பட்டறையொன்று நடாத்தப்படும். இப் பட்டறையில் விவாதிகள் கலந்துகொள்ளவேண்டியது அவசிய நிபந்தனையல்ல.
 • தெரிவுப் போட்டிகளின் முதல் சுற்றுபோட்டிகள் சுழற்சிமுறை அடிப்படையிலும் ஏனைய போட்டிகள் விலகல் முறையிலும் நடைபெறும்.
 • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
 • போட்டியாளர்கள் பண்பாட்டு உடையுடன் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.

பரிசு விபரம்

 • போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிமாணவர்களுக்கு பெறுமதியான புத்தகப் பரிசுகளும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் பாடசாலை நூலகத்துக்கு ஒருதொகுதி புத்தகங்களும் வழங்கப்படும்.
 • இறுதிப் போட்டி வெற்றியாளர்களுக்கு பாடசாலைக்கு பொதுவான வகையில் நினைவுக் கேடயம் வழங்கப்படும்.
 • இறுதிப்போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களிடையே சிறந்த விவாதி என ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அவருக்குத் தமிழ்ச் சங்கத்தின் இலச்சனை பொறிக்கப்பட்ட விருது வழங்கப்படும்.
 • போட்டியிலும் பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

தெரிவுப் போட்டிக்கானதலைப்புக்கள்

 1. இன்றைய கல்விமுறை தாய்மொழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது – இல்லை
 2. அறிவியல் வளர்ச்சி தமிழ்மொழியின் நிலைத்திருப்புக்குச் சாதகமானது–பாதகமானது
 3. தமிழ்ப் பண்பாட்டின் மீதான தமிழர்களின் பற்றுறுதி வளர்கின்றது–தளர்கின்றது
 4. தமிழ் இலக்கியங்கள் பெண்களை மேன்மைப்படுத்தியுள்ளன–சிறுமைப்படுத்தியுள்ளன
 5. காலத்துக்கேற்பதமிழ் மொழிதன்னைதகவமைத்துக்கொள்கின்றது – இல்லை
 6. பாரதிபாடல்களில் விஞ்சிநிற்பதுமொழிப் பற்றே – தேசப் பற்றே
 7. தம்பியருள் தனித்துவமானவன் இலக்குவனே–கும்பகர்ணணே
 8. வள்ளுவம் சொல்லும் வாழ்வியலை இன்றையதமிழ்ச் சமூகம் பின்பற்றுகின்றது – இல்லை
 9. ஈழத்துதமிழ் இலக்கியபுலமைத்துவம் வளர்கின்றது–தளர்கின்றது
 10. மெல்லத்தமிழ் இனிவாழும் – வீழும்

போட்டிபற்றியமேலதிகதொடர்புகளுக்கு

 1. திரு.ச.லலீசன் தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்               0773787358
 2. திரு.இ.சர்வேஸ்வரா   பொதுச்செயலாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 0778449739
 3. பேராசிரியர் தி.வேல்நம்பிபொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்     0777448352
 4. செல்வி.ப.கதிர்தர்சினி-   போட்டி இணைப்பாளர் –

 

 

 

Bookmark the permalink.

Leave a Reply