நன்றி வீரகேசரி…..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவள்ளுவர் விழா குறித்து வீரகேசரி வார இதழின் சங்கமம் பகுதியில் வெளியான குறிப்பு நன்றி வீரகேசரி  மேலும் வாசிக்க

சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற இடம்பெற்றது. நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து சரவணை நாகேஸ்வரி … மேலும் வாசிக்க

கலாநிதி தர்சனனின் நாவலர் இசையரங்கம்

தமிழ்ச் சங்கம் நடாத்திய நாவலர் விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்சனன் மிகச் சிறப்பாக நாவலர் இசையரங்கை நிகழ்த்தியிருந்தார். நாவலரைப் பற்றிய பாடல்களை மெட்டமைத்து அவர் பாடிய விதம் எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.பண்டிதர் க.பொ.இரத்தினம் செந்தமிழ் சொல்லருவி லலீசன் ஆகியோர் யாத்த பாடல்களுக்கு பொருத்தமான மெட்டினை அமைத்து தர்சனன் அவர்கள் இசைத்திருந்தார். அவருக்கு அணிசெய் கலைஞர்களாக மிருதங்கம் விரிவுரையாளர் விமல்சங்கர் வயலின் விரிவுரையாளர் கோபிதாஸ் கெஞ்சிரா … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா  24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவி விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் … மேலும் வாசிக்க

சிறப்புற நடைபெற்ற ஆய்வரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆய்வரங்க நிகழ்வுகள் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. சம்பிரதாயபூர்வமாக மேலும் வாசிக்க

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாப் போட்டி பரிசளிப்பு பதிவுகள்

தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சு கவிதை கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் நடைபெற்றது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை செல்வி.வசந்தி அரசரட்ணம் தலமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பதக்கங்களும் புத்தகப் பரிசுகளும் சான்றிதழ்களும் மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தொடக்க நிகழ்வு

யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் சிங்கைப் பரராசசேகரனும் சிங்கை செகராசசேகரனும் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழை வளர்த்தும் தமிழ்க் கல்வியைப் பரப்பியும் வந்தனர். பின்னர் நூலங்களும் கல்விக்கூடங்களாகத் திகழ்ந்த கோவில்களும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இதனால் போத்துக்கேயர் காலத்தில் தமிழ்க் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்திருந்தது. பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட்டில் தமிழ்க் கல்வி மிண்டும் வளர்ச்சியடையலாயிற்று.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் உச்ச நிலையை அடைந்திருந்தது. தமிழ் … மேலும் வாசிக்க