தமிழ்ச் சங்க காப்பாளர் பேராசிரியர் சண்முகதாசுக்கு வாழ்த்துக்கள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அகவை எழுபத்தைந்தை அடைந்தார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு நற்பணியாற்ற தமிழ்த்தாய் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம்.  வாழ்த்துக் கவியாக்கம்  செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் – பொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மேலும் வாசிக்க

நல்வைநகர் நாவலர்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர்.யாழ்ப்பாணம், நல்லூரில்தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர்.திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம்,பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். தோற்றம் ஆறுமுக நாவலர்யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5)புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் … மேலும் வாசிக்க

மதுரைப் பண்டிதர் சச்சிதானந்தன்

மிகச் சிறந்த கவிஞன் தமிழறிஞர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர் உளநூல் கல்வி நூல் விற்பன்னர் பண்டிதர் பீ.எ. எம்.பில் முதலான பல பட்டங்களைப் பெற்றவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் உபஅதிபராயிருந்து ஓய்வு பெற்றவர் சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் உருவாக்கிய காலத்தில் அவருடன் இருந்து ஆய்வுகளுக்கும் எழுத்துப்பணிக்கும் உதவிய பெருமைக்குரியவர் கீழைத்தேய மேலைத்தேய இருவழிக்கல்வியிலும் ஈடுபாடும் புலமையும் மிக்கவர். கவிதை சிறுகதை நவீனம் காவியம் முதலாம் பல்துறை இலக்கியத்துறை படைத்த … மேலும் வாசிக்க

அளவெட்டிப் பண்டிதர் க. நாகலிங்கம்

பண்டிதர் க.நாகலிங்கம் அவர்கள் அளவெட்டியில் வாழ்ந்த கனகர் சின்னப்பிள்ளை தம்பதிக்கு ஏக புதல்வனாக 1920 ஆம் ஆண்டு மார்ச் நாலாந்தேதி பிறந்தார். இவருக்குப் பின்னே தங்கையாக ஒருவர் தோன்றியதுண்டு. தாய் தந்தையருடன் பண்டிதரும் தங்கையுமாக நால்வர் சேர்ந்ததே இவர்கள் சிறிய குடும்பமாகும். பண்டிதர் அளவெட்டி வடக்கு சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் படியாகச் சேர்க்கப்பட்டார். அங்கு நான்காவது வரை கற்றவர் தொடர்ந்து ஆங்கில மொழிக் கல்வியைப் … மேலும் வாசிக்க

உலகம் உவந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார்

பக்திக்கு மொழி சொன்ன ஒரு தமிழ்ப் பிரியரை நம்முடைய மண் உலகுக்குத் தந்துள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த ஸ்தனிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை செசில் இராசம்மா தம்பதியர்க்கு 1913ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம் நாள் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் குழந்தை பிறந்தது. அப்பிள்ளைதான் பின்னர் வண.பிதா சேவியர் தனிநாயகம் ஆனார். பக்தியின் மொழி தமிழ் என்ற சிறப்பினைத் தமிழ் அன்னைக்கு வழங்கியவர் அவர்தான். ஆங்கிலம்ää லத்தீன் போன்ற மொழிகளிலே நல்ல தேர்ச்சிபெற்ற அவர் தமிழ்மொழியைத் … மேலும் வாசிக்க