சிறப்புற்ற பாரதி விழா

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதிவிழா ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். நிகழ்வில் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தமிழ்க்கவிதையில் பாரதியின் புரட்சி என்ற பொருளில் சிறப்புரையாற்றினார். வரவேற்புரையை … மேலும் வாசிக்க

கலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்த விவாதச் சமர் புகைப்படத்தொகுப்பு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அமரர் கலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்தமாக 08.02.2020 சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்திய விவாதச்சமரின் முழுமைப் புகைப்படத்தொகுப்பு மேலும் வாசிக்க

தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் இன்று (08.02.2020) சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பிரபல விவாத அணிகளைக் கொண்ட பாடசாலைகளுடன் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, கொழும்பு பிரதேசப் பாடசாலைகளும் இணைந்து 22 அணிகள் போட்டியில் பங்கேற்றன. தம்பர் மண்டபத்தில் இரவு இடம்பெற்ற இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் … மேலும் வாசிக்க

தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தனியாகம் அடிகளின் உருவச்சிலைக்கு அருட்பணி ஜெறோ அடிகளாரும் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசனும் மலர் மாலை அணிவித்தனர். சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி. கேசவன் நினைவுப் பேருரையாற்றினார். தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதப் போட்டிக்கான இறுதிப் போட்டியும் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்ச்சங்கப் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற சிவபூமிக் கலைநிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்ட சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் ஆசியுரையை வழங்கியதுடன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் … மேலும் வாசிக்க

சிவபூமி அருட்காட்சியகத்தில் தமிழ்ச் சங்க நிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படவுள்ள சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நிகழ்வுகள் குறித்த விபரங்களை கீழே உள்ள அழைப்பிதழில் காணலாம்.  மேலும் வாசிக்க

சிறப்புற்ற நாவலர் விழா -2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும், கரிகணன் அச்சகத்தாரும் இணைந்து நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவரங்க விழா நேற்றுச் சனிக்கிழமை(30-11-2019)காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்புற நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் யாழ். இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலைக்கு வழிபாடுகள் நடைபெற்றன. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணத் … மேலும் வாசிக்க

கலாநிதி க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாகார்த்த பாடசாலை மட்ட விவாதச் சுற்றுப்போட்டி– 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாகநடத்தப்படும். பாடசாலைமாணவர்களுக்கானது திறந்தபோட்டி– 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிமுறைகள் ஒருஅணியில் ஐவர் இடம் பெறவேண்டும் போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்புபட்டியலில் இருப்பர். தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் முன்னரே வழங்கப்படும். ஆனால் போட்டித் தினத்தன்று வழங்கப்பட்ட தலைப்புக்களில் ஒன்று நடுவர்களால் முடிவுசெய்யப்பட்டு வழங்கப்படும். அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கான … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்தும் திறந்த பிரிவு விவாதச் சுற்றுப்போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப் போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படும். பாடசாலை மாணவர்களுக்கானது திறந்த போட்டி – 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது போட்டி தொடர்பான விதிமுறைகள் திறந்த பிரிவினருக்கான போட்டி விதிமுறைகள் 35 வயதுக்குட்பட்ட பாடசாலையை விட்டு விலகிய இருபாலாரும் பங்குபற்றலாம். (30.09.1984 க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்) ஒரு அணியில் ஐவர் இடம்பெற வேண்டும் போட்டியில் மூவர் … மேலும் வாசிக்க