நாவலர் விழா வினாடி வினாப் போட்டி -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் பதிப்பகமும் இணைந்து அடுத்த மாத நிறைவில் (நவம்பர் 2018)  நடாத்தவுள்ள  நாவலர் விழாவை முன்னிட்டு 

யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான திறந்த பிரிவு வினாடி வினாப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டி குறித்துத் தமிழ்ச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு

இது ஒரு குழுநிலைத் திறந்த போட்டி ஆகும்.

குழு அமைப்பு முறை 

  • ஒரு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்களைக் கொண்ட ஒரு அணியை அமைக்க வேண்டும். வயது பால் வேறுபாடின்றி மாணவர்கள் எந்த தரத்தில் கல்வி கற்பவராகவும் இருக்க முடியும். (2018 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களும் கலந்து கொள்ளலாம்) 
  • குழுவில் ஐந்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் இணைக்க முடியும். ஆனால் போட்டியின் ஒரு சுற்றில் ஐந்து மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். சுற்று மாறும் போது மாணவர்களையும் மாற்றிக்கொள்ளலாம். 
  • குழு பாடசாலையின் பெயராலேயே அழைக்கப்படும். 

போட்டியின் அமைப்பு

  • ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாக இப் போட்டி அமையும். ஒவ்வொரு சுற்றிலும் பத்து வினாக்கள் கேட்கப்படும். வினாவுக்கு விடையளிப்பதற்கு ஒரு நிமிடம் வழங்கப்படும். குழுவாக கலந்துரையாடி கேட்கப்பட்ட வினாவுக்கான விடையை தரப்பட்ட தாளில் எழுதி சுற்று நிறைவில் ஒப்படைக்கவேண்டும். விடைகளை தீர்மானம் செய்ய ஒவ்வொரு சுற்றின் நிறைவிலும் ஒரு நிமிடம் வழங்கப்படும். 
  • ஐந்து சுற்றுக்கள் பின்வருமாறு அமையும்
  1. நாவலரின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய வினாக்கள் 
  2. நாவலரின் சைவ வினாவிடை மற்றும் பாலபாடம் தொடர்பான வினாக்கள் 
  3. சைவ சமய பாடத்திட்டத்துக்கு உட்பட்ட வினாக்கள் 
  4. பொதுவான சமய அறிவு சார்ந்த வினாக்கள்
  5. தமிழறிவு சார்ந்த வினாக்கள் 

விண்ணப்ப முடிவுத் திகதி : 29.10.2018 திங்கள்கிழமை பி.ப 2மணி 

போட்டி நடைபெறும் திகதி : 05.11.2018 திங்கள்கிழமை பி.ப 2 மணி 

விண்ணப்பிக்க வேண்டிய முறை : தங்கள் பாடசாலை கலந்து கொள்ளவிருப்பதை உறுதிப்படுத்திய அதிபரின் கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது செய்தியை பொறுப்பாசிரியரின் தொலைபேசி இலக்கத்துடன் பின்வரும் வழியில் அனுப்பி வைக்கலாம். 

தபால் முகவரி : 

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 

இல 28 குமாரசாமி வீதி

கந்தர்மடம்

யாழ்ப்பாணம் 

மின்னஞ்சல் : vanshajee24@gmail.com 

வைபர் மற்றும் குறும்செய்தி  : 0775752551

பரிசு விபரம் 

  • மாணவர்களுக்கான பரிசு

போட்டியில் கலந்துகொள்ளும் அத்தனை மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் முதல் மூன்று நிலைகளைப் பெறும் பாடசாலைகளுக்கு வெற்றிக்கிண்ணமும் மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்படும்.

  • பொறுப்பாசிரியருக்கான பரிசு 

முதல்நிலை பெற்ற பாடசாலையின் பொறுப்பாசிரியருக்கு நினைவுச்சின்னமும் பாராட்டுப் பத்திரமும் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற பாடசாலைகளை வழிநடத்திய பொறுப்பாசிரியர்களுக்கு பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படும். 

  • பாடசாலைக்கான பரிசு 

முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை நூலகங்களுக்கு பெறுமதியான புத்தகப்பொதி வழங்கப்படும். 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

…………………………………………………….

மேலதிக விபரங்களுக்கு : போட்டி இணைப்பாளர் : ஜீவரட்ணராஐா சஜீவன் 0775752551

தலைவர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் 0773787358

செயலாளர் இ.சர்வேஸ்வரா 0778449739

பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி 777448352

Bookmark the permalink.

Leave a Reply