தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வரின் உள்ளத்திலிருந்து….

எங்கள் மண்ணில் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காத்திடுவதற்கு உருவான தமிழ்ச்சங்கத்தை வாழ்த்துகின்றேன். இன்றைய சூழலில் எம்தலைமுறையை தாய்மொழி மீது உணர்வுபூர்வமான நேசிப்பினை ஏற்படுத்துவதற்கு இச்சங்கம் அத்தியாவசியமானது. யாழ்ப்பாணத்தில்  சென்ற நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க அமைப்பாகத் தமிழ்ச்சங்கம் செயற்பட்டதை ஈழத்தமிழர் வரலாறு கூறுகின்றது. எனினும் காலமாற்றங்களினால் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அருகிப்போனது. இந்நிலையைப் பலர் வாய்மொழியாகக் கூறி வந்தனர். இதற்குச் செயலுருக்கொடுக்கும் வகையில் முயற்சியில் மூத்தோரும் இளையோரும் இணைந்து 2012 ஆம் ஆண்டில் தமிழ்ச்சங்கம் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்…..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால அங்கத்தவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய பிரதம சிவாச்சாரியாரும் வலிகாமம் கிழக்கு சைவசமய அருள்நெறி மன்றத்தின் தலைவருமாகிய சிவஸ்ரீ. சோ.இ.பிரணதார்த்திஹரக் குருக்கள் 06.12.2013 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோப்பாய் ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள சைவசமய அருள்நெறி மன்ற மண்டபத்தில் பீமரத சாந்தி (அகவை 70 நிறைவு) வைபவத்தைக் காண்கிறார். அன்னவர் சகல வளங்களும் பெற்று வாழத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம். மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றுவர். யாழ். கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் … மேலும் வாசிக்க

கலாநிதி தர்சனனின் நாவலர் இசையரங்கம்

தமிழ்ச் சங்கம் நடாத்திய நாவலர் விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்சனன் மிகச் சிறப்பாக நாவலர் இசையரங்கை நிகழ்த்தியிருந்தார். நாவலரைப் பற்றிய பாடல்களை மெட்டமைத்து அவர் பாடிய விதம் எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.பண்டிதர் க.பொ.இரத்தினம் செந்தமிழ் சொல்லருவி லலீசன் ஆகியோர் யாத்த பாடல்களுக்கு பொருத்தமான மெட்டினை அமைத்து தர்சனன் அவர்கள் இசைத்திருந்தார். அவருக்கு அணிசெய் கலைஞர்களாக மிருதங்கம் விரிவுரையாளர் விமல்சங்கர் வயலின் விரிவுரையாளர் கோபிதாஸ் கெஞ்சிரா … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழா  24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவி விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் நாவலர் விழா 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் நல்குவர். நாவலரும் தமிழ்த்தேசியமும் என்ற … மேலும் வாசிக்க

நெடுந்தீவில் சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் விழா

நெடுந்தீவில் சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா நிகழ்வுகள். உலகத்திசையாவும் தமிழைக் காவிச்சென்று உலக அரங்குகளில் தமிழ் மொழியின் செழுமையை பழைமையை நிலைநிறுத்தி தமிழுக்கு இன்று செம்மொழி அந்தஸ்து கிடைக்க அன்றே உழைத்த தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இவ் வருடம் உலகில் தமிழர்கள் வாழும் பாகங்களில் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுப்பரப்பில் ஆழ மூழ்கிய ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியது எனினும் அத்தகைய … மேலும் வாசிக்க

புத்தகம் அன்பளித்தோர்

தமிழ்ச்சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி வடபுல மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்களுக்காக தம்மால் எழுதப்பட்ட,தொகுக்கப்பட்ட மற்றும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை பலரும் அன்பளிப்புச் செய்திருந்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் வெளிப்படைத் தன்மை கருதி அன்பளிப்புச் செய்தோர் விபரங்களையும் வெளியிடுகின்றோம். 1.பேராசிரியர் மா.சின்னத்தம்பி இலங்கைப் பொருளாதாரம் – 05 ஆசிரியர் வழிகாட்டி 05 கல்வியலாளன் 01 மொத்தம்11 … மேலும் வாசிக்க

பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச்சங்கத்தால் புத்தகங்கள் அன்பளிப்பு

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் அதிகளவான வெற்றிஇடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொண்ட பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தகப்பொதியொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ் புத்தகங்களை தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையின் பேரில் எழுத்தாளர்கள் பலர் அன்பளிப்புச் செய்திருந்தனர். வழங்கப்பட்ட பாடசாலைகள் • யாழ்ப்பாணம்- அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி • கிளிநொச்சி- தர்மபுரம் மகாவித்தியாலயம் • வவுனியா- ஓமந்தை மத்திய கல்லூரி • … மேலும் வாசிக்க