பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச்சங்கத்தால் புத்தகங்கள் அன்பளிப்பு

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் அதிகளவான வெற்றிஇடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொண்ட பாடசாலை நூலகங்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தகப்பொதியொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ் புத்தகங்களை தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையின் பேரில் எழுத்தாளர்கள் பலர் அன்பளிப்புச் செய்திருந்தனர்.
வழங்கப்பட்ட பாடசாலைகள்
• யாழ்ப்பாணம்- அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி
• கிளிநொச்சி- தர்மபுரம் மகாவித்தியாலயம்
• வவுனியா- ஓமந்தை மத்திய கல்லூரி
• முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி
• மன்னார் – புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி

பாடசாலைகளின் புத்தகப்பொதியில் பின்வரும் பெறுமதியான நூல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் விபரம்
1. இலங்கைப் பொருளாதாரம்.
2. ஆசிரியர் வழிகாட்டி
3. பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு
4. வானம் விழுந்த நெல்வயல்
5. நீயுருட்டும் சொற்கள்
6. சைவசமய தரிசனம்
7. சமூகப் பிரச்சனைகள்
8. வாழ்வியல் கல்வி
9. இதுவும் ஒரு கதை
10. பூத்திடும் பனந்தோப்பு
11. கதை கூறும் கதைகள்
12. அருணோதயம்
13. பயணிகள் கவனத்துக்கு
14. சிறுவர் துஸ்பிரயோகம்
15. செல்வழி காட்டும் செம்மொழி
16. மதுவும் அடிமை நிலையும்
17. சாடிகள் கேட்கும் விருட்சங்கள்
18. தேசவளம்
19. ஏனிந்த தேவாசுர யுத்தம்
20. இளையோர் இசை நாடகம்
21. புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும்
22. எனது மாதாந்த ஓய்வூதியம்
23. நங்கூரம்-வெளியீடுகள் 8
24. பாதுகாப்பாக இருங்கள்
25. வலுவ10ட்டல் முகாமைத்துவம்
26. மூலதனப் பாதீடிடல்
27. திருக்குறளும் முகாமைத்துவமும்
28. தொடர்பாடல்
29. ஈழத்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்
30. தமிழில் அகத்திணை மரபு
31. நூலக முகாமைத்துவ நுட்பங்கள்
32. தமிழ் நாயகம்

பாடசாலைப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை : 39

(நங்கூரம் 8 வெளியீடுகள்: 40)

மொத்த புத்தக எண்ணிக்கை : 195

Bookmark the permalink.

Comments are closed.