யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்தும் திறந்த பிரிவு விவாதச் சுற்றுப்போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப் போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படும்.

  1. பாடசாலை மாணவர்களுக்கானது
  2. திறந்த போட்டி – 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது

போட்டி தொடர்பான விதிமுறைகள்

திறந்த பிரிவினருக்கான போட்டி விதிமுறைகள்

  1. 35 வயதுக்குட்பட்ட பாடசாலையை விட்டு விலகிய இருபாலாரும் பங்குபற்றலாம். (30.09.1984 க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்)
  2. ஒரு அணியில் ஐவர் இடம்பெற வேண்டும்
  3. போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்பு பட்டியலில் இருப்பர்.
  4. விண்ணப்பிக்கும் போது பதிவுசெய்யப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே குறித்த அணியின் சார்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  5. அணியின் தலைவர் மற்றும் பேச்சாளர் ஒழுங்கு என்பவற்றை அணி முடிவு செய்ய முடியும்.
  6. தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் முன்னரே வழங்கப்படும். ஆனால் போட்டித் தினத்தன்று வழங்கப்பட்ட தலைப்புக்களில் ஒன்று நடுவர்களால் முடிவுசெய்யப்பட்டு வழங்கப்படும்.
  7. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கான தலைப்புக்கள் உடன் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தலுக்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
  8. அணியின் பெயராக ஈழத்து தமிழ் அறிஞர் ஒருவரின் பெயரினைச் சூட்ட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அணியினர் ஒரு குறித்த அறிஞரின் பெயரினைச் சூட்டும் போது விண்ணப்பம் முதலில் கிடைத்த அணிக்கு முன்னுரிமை அடிப்படையில் அப் பெயரினை பயன்படுத்தும்ஒப்புதல் வழங்கப்படும். ஏனைய அணிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு புதிய பெயர் பெறப்படும்.

விவாதிகளுக்கான நேர அளவு

  1. தலைவர் – தொடக்கவுரை-       7 நிமிடம்

இரண்டு நிமிடங்கள் தமது அணியின் பெயருக்கு உரித்தான தமிழ் அறிஞர் பற்றி உரையாற்ற வேண்டும். (புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது உரையாற்ற தவறும் இடத்து புள்ளிகள் குறைக்கப்படும்)

  1. இணை விவாதி                            4 நிமிடம்
  2. நிறைவு விவாதி                           4 நிமிடம்
  3. தலைவர் – தொகுப்புரை        3 நிமிடம்

போட்டிக்கான விண்ணப்பங்கள் உரிய வகையில் நிறைவு செய்யப்பட்டு 10.10.2019 க்கு முன்னதாக பதிவு அஞ்சல் மூலமாக

தலைவர்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

இல 28 குமாரசாமி வீதி

கந்தர்மடம்

யாழ்ப்பாணம்    எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

பதிவுக் கட்டணம்

பதிவுக் கட்டணமாக ரூபா ஐநூறு அறவிடப்படும். இக் கட்டணத்தை விண்ணப்பங்களை கையளிக்கும் போது நேரடியாக செலுத்தலாம். அல்லது தமிழ்ச் சங்கத்தின் வங்கிக்கணக்கு இலக்கமான மக்கள் வங்கி திருநெல்வேலி கணக்கிலக்கம் 162100190041412 

PEOPLE’S BANK (THIRUNELVELY BRANCH) Name of the Account : JAFFNA TAMIL CANKAM          A.C. No : 162100190041412 க்குச் செலுத்தி பற்றுச்சீட்டை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை தமிழ்ச் சங்க இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். www.thamilsangam.org

பரிசு விபரம்

  • போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணியினருக்கு பெறுமதியான புத்தகப் பரிசுகளும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படும்.
  • தெரிவுப் போட்டிகளுக்கு முன்னதாக விவாதிகளை திசைமுகப்படுத்துவதற்காக பயிற்சிப்பட்டறையொன்று நடாத்தப்படும். இப் பட்டறையில் விவாதிகள் கலந்து கொள்ளவேண்டியது அவசிய நிபந்தனையல்ல.
  • போட்டியிலும் பயிற்சிப் பட்டறையிலும் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
  • இறுதிப்போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களிடையே சிறந்த விவாதி என ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு தமிழ்ச் சங்கத்தின் இலச்சனை பொறிக்கப்பட்ட விருது வழங்கப்படும்.

தெரிவுப் போட்டிக்கான தலைப்புக்கள்

  1. இன்றைய கல்வி முறை தாய்மொழிக்கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது – இல்லை
  2. அறிவியல் வளர்ச்சி தமிழ்மொழியின் நிலைத்திருப்புக்குச் சாதகமானது – பாதகமானது
  3. தமிழ்ப் பண்பாட்டின் மீதான தமிழர்களின் பற்றுறுதி வளர்கின்றது – தளர்கின்றது
  4. தமிழ் இலக்கியங்கள் பெண்களை மேன்மைப்படுத்தியுள்ளன – சிறுமைப்படுத்தியுள்ளன
  5. காலத்துக்கேற்ப தமிழ் மொழி தன்னை தகவமைத்துக்கொள்கின்றது – இல்லை
  6. பாரதி பாடல்களில் விஞ்சி நிற்பது மொழிப் பற்றே – தேசப் பற்றே
  7. தம்பியருள் தனித்துவமானவன் இலக்குவனே – கும்பகர்ணணே
  8. வள்ளுவம் சொல்லும் வாழ்வியலை இன்றைய தமிழ்ச் சமூகம் பின்பற்றுகின்றது – இல்லை
  9. ஈழத்து தமிழ் இலக்கிய புலமைத்துவம் வளர்கின்றது – தளர்கின்றது
  10. மெல்லத்தமிழ் இனி வாழும் – வீழும்

போட்டி பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு

  1. திரு.ச.லலீசன் தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்    0773787358
  2. திரு.இ.சர்வேஸ்வரா பொதுச்செயலாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 0778449739
  3. பேராசிரியர் தி.வேல்நம்பி பொருளாளர்யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 0777448352
  4. திரு.த.கருணாகரன் – போட்டி இணைப்பாளர்              0777117426

 

 

 

 

Bookmark the permalink.

Leave a Reply