சிறப்புற்ற நாவலர் விழா -2019
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும், கரிகணன் அச்சகத்தாரும் இணைந்து நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவரங்க விழா நேற்றுச் சனிக்கிழமை(30-11-2019)காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்புற நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் யாழ். இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலைக்கு வழிபாடுகள் நடைபெற்றன. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணத் … மேலும் வாசிக்க










