யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு எதிர்வரும் 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் இரா.செல்வவடிவேலும் வாழ்த்துரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் நிகழ்த்துவர்.

தமிழியல் வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் வகிபாகம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வரங்கத்தில் சுவாமி விபுலானந்தர் என்ற பொருளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரனும் சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை என்ற பொருளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி சி.பத்மராஜாவும் வண.தனிநாயகம் அடிகள் என்ற பொருளில் தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலை பேராயர் அதிவண. கலாநிதி சு.ஜெபநேசன் அடிகளாரும் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி ஜெயலஷ்மி இராசநாயகமும் கருத்துரை வழங்குவர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் ச.லலீசன் நன்றியுரை நல்குவார்.

t1 t2 t3

Bookmark the permalink.

Leave a Reply