தன் எழுத்தை ஆயுதமாக்கிப் பயணித்தவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

நமது ஈழமண்ணில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி மறைந்தாலும் தம் எழுத்தால் சமூக நன்மைகளை விளைவித்தவர்கள் மிகச் சிலரே. அத்தகைய மகோன்னதமான மனிதர்களுள் மறைந்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முக்கியமானவர். தமிழ் இனம் விடுதலைக்கான குரலை உயர்த்திய போது ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பட்டு விடுதலைப்பயணத்தில் இணைந்து கொண்டார்கள். அதில் அமரர் இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் எழுத்திலக்கியத் துறையில் ஒரு கதைசொல்லியாக மட்டுமன்றி கருத்துருவாக்கம் செய்யும் இலக்கிய … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க பொருளாளர் பேராசிரியர் வேல்நம்பிக்கு கனடாவில் பொன்விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்து வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பிக்கு கனடாவில் அவரது மாணவர்களால் பொன்விழா நடாத்தப்பெற்றுள்ளது. பதிவுகளை படங்களில் காணலாம்.  மேலும் வாசிக்க

நாவலர் விழா வினாடி வினாப் போட்டி -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் பதிப்பகமும் இணைந்து அடுத்த மாத நிறைவில் (நவம்பர் 2018)  நடாத்தவுள்ள  நாவலர் விழாவை முன்னிட்டு  யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான திறந்த பிரிவு வினாடி வினாப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டி குறித்துத் தமிழ்ச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு இது ஒரு குழுநிலைத் திறந்த போட்டி ஆகும். குழு அமைப்பு முறை  ஒரு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்களைக் கொண்ட ஒரு அணியை அமைக்க … மேலும் வாசிக்க

ஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்

ஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் (இன்று 14.10.2018 அகவை 75 இனைக் காண்கிறார்) முகவுரை உணர்வாகி உயிராகிவிளங்கும் தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக உழைப்போர் பலர். எம்மண்ணில் பிறந்து எம்முடன் வாழ்ந்து உலகளாவிய தமிழ் வளர்ச்சிக்கெனப் பங்களிக்கும் தமிழ் இணையராகப் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணையரை அடையாளப்படுத்தமுடியும். இவர்களுள் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் 14.10.2018 இல் அகவை 75 இனைக் காண்பதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. … மேலும் வாசிக்க

நல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா -2018

யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.  தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி … மேலும் வாசிக்க

சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி

தமிழ்ச் சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளையவர்களிடையே நடாத்திய விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 16.09.2018 திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அரங்கில்  நடைபெற்றது. இதில் சுவாமி விபுலானந்தர் அணியும் தேசக்கவிஞர் புதவை இரத்தினதுரை அணியும் மோதின. இருபத்தோராம் நூற்றாண்டு தமிழை இறுதி செய்யும்  உறுதி செய்யும் எனும் தலைப்பில் அமைந்த இவ் விவாதத்தில் இறுதி செய்யும் எனப் பேசிய சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி பெற்றது.  அவர்களுக்கான வெற்றிக்கேடயத்தை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் நினைவரங்கு-2018

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கு வெகுசிறப்பாக 16.09.2018 அன்று திருமறைக்கலாமன்ற கலைத் தூது அரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ் அடையாள உருவாக்கம் திருக்குறளை முன்னிறுத்தி எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் நினைவுரையாற்றினார். நிகழ்வின் நிறைவாக தமிழ்ச் சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளையவர்களிடையே நடாத்திய விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் … மேலும் வாசிக்க

ஆசிரியர் கணேசமூர்த்தி ஓய்வு பெறுகிறார்.

கோண்டாவில் இந்துக் கல்லூரியின் தொடர்பாடலும் ஊடகக் கற்கைநெறியும் பாட ஆசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினருமாகிய திரு. ந.கணேசமூர்த்தி அகவை அறுபது எய்தி 21.09.2018 (வெள்ளி) அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.  22 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளைக் காண்கிறார்.  காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் சிறந்த மேடைப்பேச்சாளர்.பத்தி எழுத்தாளர் எனப் பல தளங்களில் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பாரதி விழா 30 ஆம் திகதி 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழா எதிர்;வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) மாலை 4 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது.  நிகழ்வில் தமிழ்ச்சங்கம் நடத்திய கவிதைப் பயிலரங்கிற்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் யாழ். முன்னணிப் பாடகர்கள் இணைந்து வழங்கும் பாரதி பாடல்களால் ஆன இசையரங்கமும் (Musical Show) இடம்பெறவுள்ளன.      மேலும் வாசிக்க

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு யாழ். பிரதான வீதி (தண்ணீர் தாங்கி அருகில்) கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் ‘தமிழ் அடையாள உருவாக்கம் – திருவள்ளுவரை முன்னிறுத்தி’ என்ற பொருளில் … மேலும் வாசிக்க