Category: செய்திகள்
நாவலர் விழா நிகழ்வின் நிழல்கள்..
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி நினைவரங்கம் எதிர்வரும் 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை வேல்.நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றுவர். தென்கிழ்க்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் பாரதியும் இயற்கையும் என்ற பொருளில் உரையாற்றுவார். தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற … மேலும் வாசிக்க
தனித்தமிழ் ஆர்வலருக்கு இனிய வாழ்த்துக்கள்
முப்பத்து மூன்றாவது அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழாவில் இலக்கியத்துறைக்கான கலாபூஷணம் விருதைப் பெற்ற தனித்தமிழ் ஆர்வலா் , யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. நா.வை. குமரிவேந்தன் (மகேந்திரன்) அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மகிழ்வடைகின்றது. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கிளிநொச்சியில் வெற்றி நகரில் (ஜெயந்தி நகர்) வசிக்கின்றாா். வருடந்தோறும் திருவள்ளுவர் நாள்காட்டியை வெளியிட்டு வருகின்றார். இதைவிட தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் நூல்களையும் … மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.. . நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் இரா.செல்வவடிவேலும் வாழ்த்துரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் ஆற்றினர். . தமிழியல் வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் வகிபாகம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வரங்கத்தில் சுவாமி … மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு எதிர்வரும் 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் இரா.செல்வவடிவேலும் வாழ்த்துரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் நிகழ்த்துவர். தமிழியல் வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் வகிபாகம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வரங்கத்தில் சுவாமி விபுலானந்தர் … மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு கதிரைகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் தமிழ்ச்சங்கத்தின் பாவனைக்கென 45 கதிரைகளை (NILKAMAL CHAMP) அன்பளிப்புச் செய்துள்ளார். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இக்கதிரைகளைக் கையளிக்கும் வைபவம் கடந்த 10.08.2017 வியாழக்கிழமை காலை நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உபசெயலாளர்களுள் ஒருவராகிய கோ.ரஜனிகாந் (பிரகாந்) பாராளுமன்ற உறுப்பினரின் செயலரிடமிருந்து … மேலும் வாசிக்க
ஆட்சிக்குழு உறுப்பினர் பாலஷண்முகனின் தாயார் காலமானார்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளருமாகிய திரு.கு.பாலஷண்முகனின் தாயார் சிவபாக்கியம் குமரேசன் கடந்த 15.07.2017 அன்று காலமானார். இறுதிக் கிரியைகள் 16.07.2017 அன்று கொக்குவில் கருவேலடி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு. ச.லலீசன் தலைமையில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. வலம்புரி நாளிதழில் அஞ்சலி விளம்பரமும் பிரசுரிக்கப்பட்டது. அவரது பிரிவால் … மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நடப்பு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தமையை ஒட்டி நடத்தப்பட்ட ஆண்டுப் பொதுக்கூட்டம் 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. 27 அங்கத்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். மேலும் வாசிக்க
யாழ்.தமிழ்ச்சங்கம் கிளிநொச்சியில் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 17.07.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை யாழ். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தனித்தமிழ் ஆர்வலர் நா.வை. குமரிவேந்தனும் சிறப்புரைகளை கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் தி.யோண்குயின்ரஸ், யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோரும் ஆடிப்பிறப்பின் சிறப்புக் குறித்த … மேலும் வாசிக்க




