யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் விசேட நிர்வாகசபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் விசேட நிர்வாக சபைக்கூட்டம் 14.05.2016 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இல. 90 ஞானவைரவர் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தலைவர் இல்லத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்திற்கென அலுவலகத்தைத் தாபித்தல், பாடசாலை மாணவர்களின் தமிழறிவை மேம்படுத்தல், ஈழத்திற்குப் புகழ் சேர்ந்த தமிழ்ப்புலமையாளர்களை மையப்படுத்தி ஆய்வரங்குகளை நடத்துதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முதன்மை வழங்குவது பற்றி ஆராயப்பட்டது. இதேவேளை புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமது விபரங்களை இற்றைப்படுத்தி வழங்குமாறும் கோரப்பட்டது.
  புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தமிழ்ச்சங்கத்தில் ஆயுள் அங்கத்தவராக உறுப்புரிமை பெற முடியும் எனவும் இதற்கு ஐம்பது டொலர் அங்கத்துவக் கட்டணமாக அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
01 02 03 04
Bookmark the permalink.

Leave a Reply