தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த உயர்தர வகுப்புக்களில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்ட வழிகாட்டல் கருத்தரங்கு 04.03.2017 சனி, 05.03.2017 ஞாயிறு ஆகிய தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்வில் வடமாகாண தமிழ்ப்பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஈ.குமரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சி.செல்வரஞ்சிதம், பேராசிரியர் கி. விசாகரூபன், விரிவுரையாளர் செல்வஅம்பிகை நந்தகுமாரன், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவரும் வாழ்நாள் பேராசிரியருமாகிய அ.சண்முகதாஸ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இரண்டாம் நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் ச.லலீசன் வரவேற்புரை நிகழ்த்தினார். யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் க.அருந்தாகரன், விரிவுரையாளர் ஈ.குமரன் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் பிரதி முதல்வர் கலாநிதி செ.திருநாவுக்கரசு ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
வடமாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் கலந்து கொண்ட யாவருக்கும் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிப்பது தொடர்பான கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தனது திணைக்களம் சார்ந்த அனுமதியை வழங்கியிருந்தார்.
நிகழ்வில் பங்கேற்ற வளவாளர்களும் இலவசமாகவே தமது சேவைகளை நல்கினர் என்பது இங்கு நன்றியுடனும் பெருமிதத்துடனும் குறிப்பிடத்தக்கது.

Bookmark the permalink.

Leave a Reply