சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விழா
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா இன்று 13.05.2017 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவன ஆதரவில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் லயன். கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைமாணி தெ.திருவேரகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். வரவேற்புரையை … மேலும் வாசிக்க











